செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா 62-வது பிறந்தநாளில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து கமல்ஹாசன் உரை

62-வது பிறந்தநாளில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து கமல்ஹாசன் உரை

1 minutes read

நடிகர் கமல்ஹாசன் அவரது 62-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் நடிகர் கமல்ஹாசன் இந்த ஆண்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துள்ளார். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருந்தததாவத, நாளை என்பது மற்றொரு நாளே. வேலை கிடக்குது ஆயிரம் இங்கே. கோலையுங்குடியையும் உயரச் செய்வோம். வேளை வரும் என காத்திருக்காது காலையிலேயே புதுயுகம் செய்வோம் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அவருடன் அவரது இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய கமல், மழை நேரங்களில் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆங்காங்கே தேங்கியிருக்கும் மழைநீரை அரசு அகற்றிவருவதால் மருத்துவ முகாமை நடத்துவதாக கமல் தெரிவித்துள்ளார். மருத்துவ முகமாமை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முகமாமுக்கும் அரசியலுக்கு எந்த தொடர்பும் இல்லை.

எங்களது அரசியல் பணிகள் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. கனவுகளில் இருந்து தான் கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. எனவே எங்களுடைய முயற்சிகள் வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.