Sunday, May 12, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விஜய் சேதுபதிக்கே செல்வி பட்டம் கொடுத்த ரசிகர்கள்

விஜய் சேதுபதிக்கே செல்வி பட்டம் கொடுத்த ரசிகர்கள்

1 minutes read

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஆரண்ய காண்டம் புகழ் தேசிய விருது பெட்ரா இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மிஷ்கின் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

வழக்கத்திற்கு மாறாக முதல் முதலாக ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டும்படி அமைந்துள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விஜய்சேதுபதியின் ஷில்பா கதாபாத்திரத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதியை மக்கள் செல்வி என்று அழைத்துள்ளனர். ஏற்கனவே மக்கள் செல்வன் என்ற பட்டம் பெற்றுள்ள விஜய்சேதுபதி தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் ஷில்பா கதாபாத்திரத்திற்காக மக்கள் செல்வி என்ற பட்டம் பெற்றுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More