ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா அதிகமான நிலை !!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராதித்யா ஆகிய இருவருக்கும் லேசாக கொரோனா பாதிப்பு மட்டுமே இருந்ததால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா வீட்டில் தனிமைப்படுத்தப் கொண்டிருந்த நிலையில் திடீரென நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் சிகிச்சை பெற்று வரும் அதே மும்பை நானாவதி மருத்துவமனையில்தான் ஐஸ்வர்யாராய் மற்றும் ஆராதித்யா அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவருக்கும் கொரோனாவின் அறிகுறி சற்று அதிகமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தற்போது அவர்கள் இருவரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

மும்பை நானாவதி மருத்துவமனையில் தற்போது அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் மற்றும் ஆராதித்யா ஆகிய நால்வரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும், அமிதாப் மனைவி ஜெயாபச்சனுக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்