Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் வாய்ப்பல்ல, வாழ்க்கை கொடுத்தவர் | தனுஷை புகழ்ந்த பிரபலம்

வாய்ப்பல்ல, வாழ்க்கை கொடுத்தவர் | தனுஷை புகழ்ந்த பிரபலம்

1 minutes read

வாய்ப்பு கொடுக்கவில்லை; வாழ்க்கை கொடுத்திருக்கிறார் என்று பிரபல காமெடி நடிகர் ஒருவர் தனுஷை புகழ்ந்த பேசி இருக்கிறார்.வாய்ப்பு கொடுக்கவில்லை, வாழ்க்கை கொடுத்திருக்கிறார்...  தனுஷை புகழ்ந்த பிரபல நடிகர்தனுஷ்தனுஷ் ரசிகர் ஒருவர் உணவகத் திறப்பு விழா ஒன்றை நடத்தினார். இதில் நடிகர் ரோபோ சங்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உணவகத்தைத் திறந்து வைத்தார். 
பின்னர் பேசிய அவர், ”தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை; வாழ்க்கை கொடுத்திருக்கிறார். தென்னிந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்டவர் தனுஷ்தான். கொரோனா காலகட்டத்தில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய உதவியைச் செய்தார்.

ரோபோ சங்கர் - தனுஷ்

ஒரு பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். பிறகு தனுஷுக்கு போன் செய்தேன். அப்போது அவர் டெல்லி கிளம்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இதைக் கேட்கலாமா என்று யோசித்து தயக்கத்துடன் கேட்டேன். எனக்குக் குடும்ப ரீதியான மிகப்பெரிய உதவியைச் செய்தார்.
நான் இன்று என் குடும்பத்துடன் மூன்று வேளை நிம்மதியாகச் சாப்பிடுவதற்கான ஆரம்பப் புள்ளியைப் பல இயக்குநர்கள் வைத்திருந்தாலும், என் வாழ்க்கையை உயர்த்தியவர் தனுஷ்தான்.
இவ்வாறு ரோபோ சங்கர் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More