செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘என்ன விலை’ படத்தின் மூலம் வெள்ளி விழா கொண்டாடும் நடிகர் கருணாஸ்

‘என்ன விலை’ படத்தின் மூலம் வெள்ளி விழா கொண்டாடும் நடிகர் கருணாஸ்

1 minutes read

பாலா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டில் வெளியான ‘நந்தா’ படத்தில் ‘லொடுக்கு’ பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலக வரலாற்றில் தன்னுடைய கலை பயணத்தை தொடங்கிய குணச்சித்திர நடிகர் கருணாஸ் – எதிர்வரும் செப்டம்பரில் வெளியாகும் ‘என்ன விலை’ படத்தின் மூலம் தன்னுடைய 25ஆவது வெள்ளி விழா ஆண்டை நிறைவு செய்கிறார் என்பதால் அவரது ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

தேசிய விருது பெற்ற படைப்பாளி சஜீவ் பழூர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ், விஜயலட்சுமி, பூர்ணிமா பாக்கியராஜ், வை. ஜி. மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், ‘நிழல்கள்’ ரவி, ‘சித்தா’ தர்ஷன், மோகன் ராம், சேத்தன் குமார் , கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், ‘கோலிசோடா’ பாண்டி, ஜே எஸ் கவி, சுவாமிநாதன், தீபா ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அல்பி அண்டனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.

அர்த்தமுள்ள பொழுதுபோக்கு படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜித்தேஷ் விஷ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தன்னுடைய திரையுலக பயணத்தில் வெள்ளிவிழா ஆண்டை கடந்து செல்லும் நடிகர் கருணாஸ் படத்தை பற்றி பேசுகையில், ” இப்படத்தின் கதையை இயக்குநர் சஜீவ் பழூர் விவரித்தவுடன் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

உணர்வுபூர்வமான கதை. சாதாரண மக்களின் வாழ்வியல் போராட்டங்களும், அவர்களுக்கான சுயமரியாதை மற்றும் நம்பிக்கையை குறித்து இப்படம் பேசுகிறது. இப்படத்தில் நடிப்பதற்காக கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதுகிறேன்” என்றார் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.