செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் 3 சீரியல் நடிகைகள்!

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் 3 சீரியல் நடிகைகள்!

0 minutes read

நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் வில்லனாக நடிக்கின்றனர். மேலும் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஷிவானி, மைனா நந்தினி, மகேஷ்வரி ஆகியோர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மூவரும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.