செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கையில் பேனாவுடன் தனுஷ்… ரசிகர்களை கவர்ந்த மோஷன் போஸ்டர்!

கையில் பேனாவுடன் தனுஷ்… ரசிகர்களை கவர்ந்த மோஷன் போஸ்டர்!

0 minutes read

நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு, மாறன் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் தனுஷ் கையில் பேனாவுடன் நிற்கும் காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.