செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விசில் மஹாலட்சுமியாக கலக்கும் கீர்த்தி ஷெட்டி!

விசில் மஹாலட்சுமியாக கலக்கும் கீர்த்தி ஷெட்டி!

0 minutes read

காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் “தி வாரியர்” படத்தில், கீர்த்தி ஷெட்டி தோற்றத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் கீர்த்தி ஷெட்டி, சர்ட் & ஜீன்ஸுடன் ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டிருக்கிறார். கீழே கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் தோன்றும் கதாப்பாத்திரத்தின் பெயரான விசில் மஹாலட்சுமி எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனிவாச சில்வர் ஸ்கிரின் பேனர் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க, பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார். 2021 ஆம் ஆண்டில் மிகப்பெரும் வெற்றிபெற்ற ‘சீடிமார்’ படத்தினை தயாரித்த இந்நிறுவனத்தின் அடுத்த படைப்பு, “தி வாரியர்” என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ஆதி பினிஷெட்டி இதுவரை பார்த்திராத வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். அக்‌ஷரா கௌடா மிக சுவாரஸ்யமான, முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.