செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விமல் நடிக்கும் ‘குலசாமி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விமல் நடிக்கும் ‘குலசாமி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

1 minutes read

நடிகர் விமல் நடிப்பில் தயாராகி வரும் ‘குலசாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. 

‘தண்டாயுதபாணி’, ‘நாயகன்’, ‘பில்லா பாண்டி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சரவண ஷக்தி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குலசாமி’. 

விமல் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ‘தாராள பிரபு’ பட புகழ் நடிகை தான்யா ஹோப் நடித்திருக்கிறார். 

Did You Know, Vimal is the only actor to be part of three National  Award-winning films in the last 20 years? | Tamil Movie News - Times of  India

இவர்களுடன் நடிகர் போஸ் வெங்கட், நடிகை வினோதினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் இந்த படத்தில் முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் ஜாங்கிட் முக்கிய வேடத்தில் நடித்து நடிகராக அறிமுகமாகிறார். 

வைட் ஆங்கிள் ரவி சங்கரன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மகாலிங்கம் இசையமைக்கிறார். 

எம். ஐ. கே  புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் இளையராஜா, கார்த்திகேயன், முத்துக்குமார் ஆகிய மூவரும் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் குலசாமி படத்தை தயாரித்திருக்கிறார்கள். 

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவடையும் தருணத்தில் இருப்பதால், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். 

இதனை ‘குல சாமி’ படத்திற்கு வசனம் எழுதியிருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

விமல் நடிப்பில் அண்மையில் வெளியான ‘விலங்கு’ வலைதள தொடருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் நடிப்பில் தயாராகி விரைவில் வெளியாகவிருக்கும் ‘குலசாமி’ படத்திற்கும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரவேற்பு கிடைத்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.