Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் நடிகர் விஜய் அண்டனியின் ‘தமிழரசன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் விஜய் அண்டனியின் ‘தமிழரசன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

1 minutes read

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘தமிழரசன்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘தாஸ்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தமிழரசன்’. இதில் விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகர் ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சுரேஷ் கோபி, யோகி பாபு, சோனு சூட், ராதா ரவி, ரோபோ சங்கர், முனிஷ்காந்த், கஸ்தூரி, சங்கீதா கிருஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் என் எஸ் மூவிஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் கௌசல்யா ராணி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பணிகள் கொரோனா காலகட்டத்திற்கு முன்னரே நிறைவடைந்திருந்தாலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள் போன்றவை வெளியாகி இருந்தாலும்.. கொரோனா காரணமாக இந்த திரைப்படம் வெளியாகவில்லை. தற்போது இப்படம் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தில் விஜய் அண்டனியின் வழக்கமான சஸ்பென்ஸ் திரில்லர் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் இப்படம் பெரும் வெற்றி பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள். விஜய் அண்டனி நடிப்பில் ‘அக்னி சிறகுகள்’, ‘காக்கி’, ‘ரத்தம்’, ‘கொலை’, ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘பிச்சைக்காரன் 2’ ஆகிய படங்களின் பணிகள் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், அவர் நடிப்பில் தயாரான ‘தமிழரசன்’ , இம்மாதம் வெளியாவது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதனிடையே திட்டமிட்டபடி ‘தமிழரசன்’ இம்மாத இறுதிக்குள் வெளியானால் விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி, இந்த ஆண்டில் வெளியாகும் முதல் படம் இது என்ற பெருமையை பெரும் என அவரது ரசிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More