செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் ரிலீஸ் உரிமையை பெற்ற லைகா

தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் ரிலீஸ் உரிமையை பெற்ற லைகா

0 minutes read

தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் ஏற்கனவே தொடங்கி விட்டதாக கூறப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் இந்த போஸ்டரில் டிசம்பர் 15ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.