Thursday, February 22, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சென்னை சர்வதேச திரைப்பட விழா | 12 தமிழ் படங்களுக்கு அங்கீகாரம்

சென்னை சர்வதேச திரைப்பட விழா | 12 தமிழ் படங்களுக்கு அங்கீகாரம்

1 minutes read

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பு சென்னையில் ஆண்டுதோறும் நடத்தி வரும் சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும்  டிசம்பர் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. குறித்த விழாவில் திரையிடப்பட உள்ள தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 57 நாடுகளைச் சேர்ந்த 126 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த விழாவில் ஆரம்ப நிகழ்ச்சியின்போது, இந்த ஆண்டுக்கான கேன்ஸ் விருது வென்ற ’அனாடமி ஆஃப் எ ஃபால்’ என்ற திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதில் 8 ஈரானியப் படங்கள், 5 கொரியப் படங்கள் உள்ளிட்ட படங்கள் இடம்பெறுகின்றன.

இந்த திரைப்பட விழாவில், போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்ப் படங்களின் பட்டியல் இதோ!

1. அநீதி – வசந்தபாலன்

2. அயோத்தி – மந்திர மூர்த்தி

3. கருமேகங்கள் கலைகின்றன – தங்கர்பச்சான்

4. மாமன்னன் – மாரி செல்வராஜ்

5. போர் தொழில் – விக்னேஷ் ராஜா

6. ராவண கோட்டம் – விக்ரம் சுகுமாறன்

7. சாயாவனம் – அனில்

8. செம்பி – பிரபு சாலமன்

9. ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் – சந்தோஷ் நம்பிராஜன்

10. உடன்பால் – கார்த்திக் சீனிவாசன்

11. விடுதலை பாகம் 1 – வெற்றிமாறன்

12. விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3 – அமுதவாணன்

 

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More