செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா “என் கனவுப் படம்…” : வாய் திறந்த ஜி.வி.!

“என் கனவுப் படம்…” : வாய் திறந்த ஜி.வி.!

1 minutes read

இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் அண்மையில் ஒரு பேட்டியின்போது, ஒரு நடிகராக தனது கனவை வெளிப்படுத்தியிருந்தார். அதில் அவர், இயக்குநர் ராம் இயக்கும் காதல் படம் ஒன்றில் தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றும் அந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க வேண்டும் என்றும் தான் பெரிதும் எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

இது பற்றிய பேச்சுவார்த்தைகள் அவ்வப்போது நடைபெற்றபோதும் இயக்குநர் ராமின் நேரப் பற்றாக்குறையால் தனது இந்தக் கனவு இன்னும் நிறைவேறவில்லை என்றும், அதேவேளை, நிச்சயமாக இது நனவாகத்தான் போகிறது என்றும் ஜி.வி. குறிப்பிட்டிருந்தார்.

ஜி.வி. நடிப்பில் அடுத்தடுத்து ‘இடிமுழக்கம்’, ‘13’, ‘கள்வன்’, ‘ரெபெல்’ மற்றும் ‘டியர்’ போன்ற படங்கள் வெளியாகவுள்ளன.

அதேநேரம், தனுஷின் ‘கெப்டன் மில்லர்’, விக்ரமின் ‘தங்கலான்’, சிவகார்த்திகேயனின் 21வது படம், சூர்யாவின் 43வது படம் மற்றும் விக்ரம் நடிப்பில் உருவாகவிருக்கும் அவரது 62வது படத்துக்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.