செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நவீன் சந்திரா நடிக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இணைய தொடர் வெளியீடு

நவீன் சந்திரா நடிக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இணைய தொடர் வெளியீடு

1 minutes read

ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் 29ஆம் திகதியன்று ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ எனும் இணைய தொடர் வெளியாகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

‘திரு திரு துறு துறு’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநரும், ‘நிலா நிலா ஓடி வா’ எனும் இணைய தொடரை எழுதி இயக்கியவருமான இயக்குவர் ஜே. எஸ். நந்தினி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ எனும் இணைய தொடரில் நவீன் சந்திரா, சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், குமரவேல், ஸ்ரீ கிருஷ்ணா தயாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பத்து அத்தியாயங்கள் கொண்ட இந்த இணைய தொடர் மார்ச் மாதம் 29ஆம் திகதி முதல் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. காவல்துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் குற்ற சம்பவங்களை விசாரிப்பதற்காக மேற்கொள்ளும் பயணத்தில் எதிர்பாராத வகையில் பல அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுகிறது. இவற்றையெல்லாம் கடந்து அவர் உண்மையான குற்றவாளியை எப்படி துப்புத் துலக்கி கண்டறிகிறார் என்பதுதான் இந்த இணைய தொடரின் கதை.

‘சுழல்’ போன்ற திரில்லர் ஜேனரில் இணைய தொடர்களை வழங்குவதில் அனுபவம் வாய்ந்த பிரைம் வீடியோ, ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ எனும் புதிய கிரைம் திரில்லர் தொடரை வழங்குவதால்.. இதற்கான எதிர்பார்ப்பு டிஜிட்டல் தள பார்வையாளர்களிடையே எழுந்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.