செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஜெயம் ரவி வெளியிட்ட நடிகர் தீரஜ் நடிக்கும் ‘டபுள் டக்கர்’ பட ஓடியோ

ஜெயம் ரவி வெளியிட்ட நடிகர் தீரஜ் நடிக்கும் ‘டபுள் டக்கர்’ பட ஓடியோ

1 minutes read

நடிகர் தீரஜ் முதன் முறையாக இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கும் ‘டபுள் டக்கர்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது. மெலோடி கிங் என போற்றப்படும் வித்யாசாகர் சிறிய இடைவேளைக்குப் பிறகு இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

சென்னையை அடுத்துள்ள தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளின் முன்னிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி மற்றும் ‘அயலான்’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் ஆர். ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி இப்படத்தின் இசையை வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டபுள் டக்கர்’ எனும் திரைப்படத்தில்  தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம். எஸ் . பாஸ்கர், முனீஸ்காந்த், காளி வெங்கட், சுனில் ரெட்டி, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.

ஃபேண்டஸி என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எயர் ஃபிளிக் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

விரைவில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி இதுவரை மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைத்த ‘மெலோடி கிங்’ வித்யாசாகரின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடும் வகையில் இப்படத்தின் இசை வெளியீடு, தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.