செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இளம் தம்பதிகளின் குழந்தையின்மை பிரச்சனையை பேசும் ‘வெப்பம் குளிர் மழை’

இளம் தம்பதிகளின் குழந்தையின்மை பிரச்சனையை பேசும் ‘வெப்பம் குளிர் மழை’

1 minutes read

தமிழ் சமூகத்தில் வாழும் இளம் தம்பதிகள்.. தங்களின் தேனிலவு தருணங்களை ஜோடியாக கொண்டாடினாலும், அவர்களின் விருப்பத் தெரிவுகளில் முதன்மையாக இருப்பது பட மாளிகைகளுக்குச் சென்று திரைப்படத்தை கண்டு ரசிப்பது தான்.

இத்தகைய தருணங்களில் அவர்களுக்கு வாழ்வில் சில விடயங்களை சூசகமாகவும், பூடகமாகவும் கற்பிப்பது திரைப்படங்களே. இதனால் ஃபேமிலி டிராமா திரைப்படங்கள் சென்டிமென்ட் மற்றும் எமோஷனுடன் காதலையும் இணைத்து சொன்னால்.. ரசிகர்கள் இன்று வரை வெற்றி பெற செய்கிறார்கள்.

ரசிகர்களின் இந்த விருப்பத்தை உணர்ந்திருக்கும் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து தலைமையிலான படக் குழுவினர் ‘வெப்பம் குளிர் மழை’ எனும் பெயரில் திரைப்படமொன்றை உருவாக்கியிருக்கிறார்கள். இதன் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

புதுமுக நடிகர் திரவ், இஸ்மத் பானு, எம். எஸ். பாஸ்கர், ரமா, மாஸ்டர் கார்த்திகேயன், விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘வெப்பம் குளிர் மழை’ எனும் திரைப்படத்தை பாஸ்கல் வேதமுத்து இயக்கியிருக்கிறார்.

பிருத்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சங்கர் ரங்கராஜன் இசையமைத்திருக்கிறார். இளம் தம்பதிகள் எதிர்கொள்ளும் குழந்தையின்மை பிரச்சனையை மையப்படுத்தி கிராமிய பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹேஷ்டேக் எஃப் டி எஃப் எஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெரால்ட் திரவியம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. குணச்சித்திர நடிகர் எம் எஸ் பாஸ்கரின் பின்னணி குரலில் வெளியாகி இருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.‌ திருமணமாகி சில ஆண்டுகளுக்கு பின்னர் செயற்கை முறையில் கருத்தரித்திற்கும் தம்பதிகளை பற்றி ஊராரின் ஏளனமும், மனதை புண்படுத்தும் பேச்சும்… தம்பதிகளையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் எப்படி பாதிக்கிறது என்பதனை யதார்த்தமாக படமாக்கப்பட்டிருப்பதால் இப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.