Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா உதய் கார்த்திக் நடிக்கும் ‘ஃபேமிலி படம்’

உதய் கார்த்திக் நடிக்கும் ‘ஃபேமிலி படம்’

1 minutes read

‘டை நோ சர்ஸ்’ எனும் படத்தின் மூலம் அறிமுகமாகி, பிரபலமான நடிகர் உதய் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஃபேமிலி படம்’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது திரையுலகப் பிரபலங்கள் பலர் வருகை தந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அறிமுக இயக்குநர் செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஃபேமிலி படம்’ திரைப்படத்தின் உதய் கார்த்திக், சுபிக்ஷா, விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஸ்ரீஜா, சந்தோஷ், மோகனசுந்தரம், ஆர்.ஜே பிரியங்கா, ஜனனி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அனிவீ இசையமைக்கிறார். பொழுதுபோக்கு குடும்பச் சித்திரமாக தயாராகும் இந்த திரைப்படத்தை யூ கே கிரியேஷன்ஸ் சார்பின் தயாரிப்பாளர் கே. பாலாஜி தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பிகள் என மூவர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என போராடுகிறார்கள். இவர்களுக்குள் நிகழும் சண்டைகள், முரண்பாடுகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்து ஒரு ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக இத்திரைப்படம் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More