செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தேஜ் சரண்ராஜ் நடிக்கும் ‘வல்லவன் வகுத்ததடா’ பட முன்னோட்டம் வெளியீடு

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் ‘வல்லவன் வகுத்ததடா’ பட முன்னோட்டம் வெளியீடு

1 minutes read

இளம் படைப்பாளிகள் தங்களது முதல்  படைப்பிற்கான அடையாளத்தை முன்னோட்டத்திலேயே பதிவு செய்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடும் போக்கு தமிழ் திரையுலகில் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் அறிமுக இயக்குநர் விநாயக் துரை தயாரித்து இயக்கியிருக்கும் ‘வல்லவன் வகுத்ததடா’ படத்தின் முன்னோட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

நண்பர்கள் -உறவினர்கள் -மனைவி- காதலி.. ஆகிய நான்கு கதாபாத்திரங்கள், கொடுக்கும் அழுத்தங்களும், ஏற்படுத்தும் நெருக்கடிகளும் பற்றி உணர்வுபூர்வமாக பேசியிருப்பதால் ‘வல்லவன் வகுத்ததடா’ படத்தின் முன்னோட்டத்திற்கு இணையவாசிகளிடம் ஆதரவு அதிகரித்து வருகிறது.

இயக்குநர் விநாயகர் துரை இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வல்லவன் வகுத்ததடா’ எனும் திரைப்படத்தில் நடிகர் சரண்ராஜின் வாரிசும், நடிகருமான தேஜ் சரண்ராஜ் முதன்மையான வேடத்தில் நடிக்க, அவருடன் ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஜிஸ்னா சேவியர் இசையமைத்திருக்கிறார்.

கோடிக்கணக்கிலான பணத்தை கொள்ளையடிப்பதை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபோக்கஸ் மீடியா பட நிறுவனம் சார்பில் இயக்குநர் விநாயக துரை தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பண தேவைகளுக்காக ஒவ்வொரு கதாபாத்திரமும்.. வித்தியாசமான சூழலில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும், அழுத்தங்களும் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.