Saturday, April 13, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வைபவ் நடிக்கும் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

வைபவ் நடிக்கும் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

1 minutes read

சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கான நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் நடிகர் வைபவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்: எனும் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர்கள் விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அருண் கேசவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ எனும் திரைப்படத்தில் வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டன் ராஜேஷ், ஆனந்த் ராஜ், நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, இளவரசு, லிவிங்ஸ்டன், ஷீஹான் ஹுசைனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோ டோனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். வங்கி கொள்ளையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ‘டிமான்டி காலனி 2’ எனும் படத்தை தயாரித்த பி டி ஜி யுனிவர்சல் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. டார்க் ஹீயூமராக உருவாகி இருக்கும் இப்படத்தின் மோசன் போஸ்டருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More