செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அமீர் நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

அமீர் நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

1 minutes read

இயக்குநரும், நடிகருமான அமீர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘உயிர் தமிழுக்கு’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆஞ்சு ஆஞ்சு..’ என தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆதம் பாவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘உயிர் தமிழுக்கு’ எனும் திரைப்படத்தில் அமீர், சாந்தினி, இமான் அண்ணாச்சி, இயக்குநர்களும், நடிகர்களுமான ராஜ்கபூர் மற்றும் சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘மெலடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். உள்ளூர் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மூன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் ஆதம்பாவா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ‘ஆஞ்சு ஆஞ்சு ஆஞ்சு போட்டுப்புட்டா..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் பா. விஜய் எழுத பின்னணி பாடகர் கார்த்திக் பாடியிருக்கிறார். வித்யாசாகரின் இசையில் மெல்லிசையாகவும், காதலை கொண்டாடும் வகையிலும் வெளியாகி இருக்கும் இந்த பாடல்.. கிராமத்து பாணியிலான பாடல்களை ரசிக்கும் இசை ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.