Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் பட்டாணி கார சுண்டல்!

பட்டாணி கார சுண்டல்!

1 minutes read

தேவையான பொருட்கள்
பச்சை பட்டாணி – 1 கப்,
கேரட் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் – 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

தாளிக்க
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
வெள்ளை உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்,
வரமிளகாய் – 2,
கறிவேப்பிலை – 6 இதழ்கள்.

மேலே தூவுவதற்கு

அரிந்த மல்லித்தழை – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

பச்சை பட்டாணியை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த பட்டாணியைச் சேர்த்து வதக்கி கேரட் துருவல், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். மல்லித்தழை தூவி கலந்துவிடவும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More