என்னென்ன தேவை?
தயிர் – 1 கப்,
குழம்பு மிளகாய் பொடி – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – சிறிது,
பெரிய வெங்காயம் – 1,
பச்சைமிளகாய் – 1,
கறிவேப்பிலை, கடுகு – சிறிது,
எண்ணெய், உப்பு – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
தயிரில் உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாயை வதக்கி தயிர் கலவையில் கலந்து பரிமாறவும். தயிரும், குழம்பு மிளகாய் பொடியும் சேர்த்து அற்புதமான மணமும், சுவையுமாக இருக்கும்.