தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 1/ 4 கிலோ
மிளகாய்த்தூள் – 2ஸ்பூன்
சோம்புத் தூள் – 2 ஸ்பூன்
பூண்டு பல் – 5
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கை அதில் போடவும். பிறகு மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் கிளறவும். பிறகு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். பிறகு தண்ணீர் சுண்டி வந்தவுடன் அதில் ஒரு ஸ்பூன் சோம்பு தூள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு பூண்டு பற்களை நசுக்கி அதில் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.
நன்றி -தினகரன்