Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் கறிவேப்பிலை மீன் வறுவல்!

கறிவேப்பிலை மீன் வறுவல்!

1 minutes read

தேவையான பொருட்கள்:
பாம்ஃப்ரெட் மீன் – 1 பெரிய கையளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

அரைப்பதற்கு…
கறிவேப்பிலை – 1 கையளவு
மிளகு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2-3
பூண்டு – 4 பற்கள்
பச்சை மிளகாய் – 3-4
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 3-4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு அந்த மசாலாவை மீனில் தடவி, 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு தவா அல்லது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீனை வைத்து, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், கறிவேப்பிலை மீன் வறுவல் ரெடி!

நன்றி -தினகரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More