செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் வெஜிடபிள் பிடி கொழுக்கட்டை!

வெஜிடபிள் பிடி கொழுக்கட்டை!

1 minutes read

தேவையான பொருட்கள் :
அரிசி – 200 கிராம்,
கேரட்- 2
பீன்ஸ் – 100 கிராம்,
குடைமிளகாய் – ஒன்று,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 2,
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எண்ணெய் – 50 மில்லி,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

கேரட், பீன்ஸ், இஞ்சி, ப,மிளகாய், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியை ரவை போல மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அவை சிறிது வதங்கியவுடன கேரட், குடைமிளகாய், பீன்ஸ், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.

ஒரு பங்கு அரிசி ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும் அரிசி ரவையை சேர்த்துக் கிளறி வேகவிட்டு எடுக்கவும்.

இந்தக் கலவை நன்கு ஆறியவுடன் சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

அருமையான சுவையில் வெஜிடபிள் பிடி கொழுக்கட்டை தயார்.

நன்றி-மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.