மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் ஏதாவது சூடாகவும் மொறுமொறுப்பாகவும் சாப்பிடக் கேட்டுக்கொண்டிருக்கிறார்களா? அப்படியென்றால் மதியம் மீந்த ரைஸ் வீணாக விட்டுவைக்காமல், அதைக் கொண்டு சுவையான ரைஸ் ப்ரிட்டர்ஸை செய்து கொடுங்கள்.
இந்த ஸ்நாக்ஸ் விருந்தினர்கள் வீட்டிற்கு திடீரென வந்தாலும் சிறந்த விருப்பமாக இருக்கும்.
குறிப்பாக மழைக்காலத்தில், சூடாகவும் குருமுறுப்பாகவும் ஏதாவது சாப்பிட தோன்றும் நேரங்களில் இது ஒரு அற்புதமான தேர்வு. முக்கியமாக, சமையல் புதியவர்களுக்குக் கூட இது மிகவும் எளிதாக செய்யக்கூடியது.
தேவையான பொருட்கள்
மீந்த ரைஸ் – 1 கப்
தயிர் – ½ கப்
உப்பு – தேவையான அளவு
சீரகம் – ½ டீஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் – ½ டீஸ்பூன்
இஞ்சி – 1 சிறிய துண்டு
அரிசி மாவு – ¼ கப்
கறிவேப்பிலை (நறுக்கியது) – 1 கொத்து
பேக்கிங் சோடா – ¼ டீஸ்பூன்
தண்ணீர் – ¼ டம்ளர்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
தயாரிக்கும் முறைகள்
மிக்சர் ஜாரில் மீந்த சாதத்தை போடவும்.
அதில் தயிர், உப்பு, சீரகம், சில்லி ப்ளேக்ஸ், இஞ்சி, அரிசி மாவு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைத்த கலவையை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.
அதில் நறுக்கிய கறிவேப்பிலை, பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கலவையை சிறிய உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் விட்டுப் பொரிக்கவும்.
மிதமான தீயில் பொன்னிறமாக crispy ஆகும் வரை பொரித்து எடுத்தால் ருசியான ரைஸ் ப்ரிட்டர்ஸ் தயார்!
இந்த ரைஸ் ப்ரிட்டர்ஸை கெட்சப் அல்லது சட்னியுடன் பரிமாறினால் இன்னும் ருசியாக இருக்கும்.