செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் மாங்காய் காரக் குழம்பு: சுவையில் முந்தும் பாரம்பரிய ரெசிபி!

மாங்காய் காரக் குழம்பு: சுவையில் முந்தும் பாரம்பரிய ரெசிபி!

2 minutes read

சாம்பாருக்குப் பிறகு பல வீடுகளில் அடிக்கடி செய்யப்படும் உணவு காரக் குழம்புதான். இப்போது மாங்காய் சீசன் தொடங்கியுள்ளதால், வழக்கமான வெண்டைக்காய் அல்லது கத்திரிக்காய் குழம்பை விட்டு விட்டு, மாங்காயை வைத்து ஒரு சுவையான காரக் குழம்பை செய்து பார்ப்பது நல்ல மாற்றமாக இருக்கும்.

பலருக்கு தெரியாத இந்த மாங்காய் காரக் குழம்பு, செட்டிநாடு சமையலில் மிகவும் பிரபலமானது. சுவையிலும், மணத்திலும் தனித்துவம் கொண்ட இந்த குழம்பு, சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். அதிலும், இந்த ரெசிபியின் சிறப்பு என்னவென்றால், இது சுலபமாக தயாரிக்கக்கூடியது மட்டுமல்லாமல், சில நாட்கள் வரை கெடாமல் வைத்து சாப்பிடவும் முடியும்.

வழக்கமான சமையலில் மாற்றம் தேடும் போது, இந்த ஸ்டைல் மாங்காய் காரக் குழம்பை முயற்சி செய்து பாருங்கள். வீட்டில் உள்ள அனைவரையும் கவரும் சுவையுடன் இது இருக்கும். கீழே இதை செய்வதற்கான எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது — அதை பின்பற்றி நீங்களும் இந்த அற்புதமான ரெசிபியை தயார் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

– மாங்காய் – 2 (நீளவாக்கில் கீறி வைத்து கொள்ளவும்)
– புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
– மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
– கறிவேப்பிலை – 1 கொத்து
– உப்பு – தேவையான அளவு
– அரிசி கழுவிய நீர் – 2 கப்

வறுத்து அரைக்க:

– எண்ணெய் – 1 ஸ்பூன்
– வெந்தயம் – 1/2 ஸ்பூன்
– கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
– உளுத்தம்பருப்பு – 1 1/2 ஸ்பூன்
– துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
– வர மிளகாய் – 6
– பெருங்காயம் – 1/4 ஸ்பூன்

தாளிக்க:

– கடுகு – 1/2 ஸ்பூன்
– உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்
– கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

– ஒரு அகன்ற பாத்திரத்தில் அரிசி கழுவிய நீரை எடுத்துக்கொண்டு, அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒரு புளியங்கொட்டையை சேர்க்கவும்.

– மாங்காயை மூன்று துண்டுகளாக கீறி வைத்துக் கொள்ளவும்.

– இந்த மாங்காயை அரிசி கழுவிய நீரில் சேர்த்து, மாங்காய்கள் நன்கு வேகும் வரை மூடி வைத்துச் சமைக்கவும். மாங்காய்கள் அதிகப்படியாக வெந்து குழைந்துவிடாமல் இருக்க வேண்டும்.

– மாங்காய் கொதிக்கும்போது, ​​1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.

– இப்போது ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, வெந்தயம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, வர மிளகாய் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து ஆற விடவும்.

– இவை ஆறியதும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரப்பான பொடியாக அரைக்கவும்.

– மாங்காய்கள் வெந்ததும், அரைத்து வைத்துள்ள இந்த பொடியைச் சேர்த்து, 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்; இப்போது ஒரு இனிமையான நறுமணம் வெளிப்படும்.

– இந்த குழம்பு சற்று தண்ணீர் பதத்தில் இருந்ததால்தான் நன்றாக இருக்கும்.

– பின்னர் ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி சூடாக்கவும், எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.

– கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை மற்றும் உளுந்து சேர்த்து தாளிக்கவும்.

– இறுதியாக இந்த தாளிப்பை குழம்பின் மீது ஊற்றி நன்றாக கிளறினால் சுவையான மாங்காய் கார குழம்பு ரெடி.

– இதை அரை மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு அதன்பின் சாப்பிடவும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.