காஸாவில் இனப்படுகொலை நடப்பதாக ஸ்பெயின் குற்றஞ்சாட்டியுள்ளது.
இஸ்ரேல் அதன் மனித உரிமை உடன்பாடுகளை மீறிவிட்டதாகவும், அதனால் இஸ்ரேலுடனான உறவை ஐரோப்பிய ஒன்றியம் இரத்துச் செய்யவேண்டும் என்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரொ சான்செஸ் வலியுறுத்தியுள்ளார்.
காஸா போரில் இனப்படுகொலை நடப்பதாக ஐரோப்பிய நாடு ஒன்றின் தலைவர் கூறியுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.
அத்துடன், பிரசல்ஸ்ஸில் நடக்கவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டுக்கு முன்னர் அவர் இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார். இதனால் இந்த விடயம் ஐரோப்பிய ஒன்றியத்துடனாக உறவில் இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
காஸாவில் இஸ்ரேல் முன்னெடுக்கும் இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கு ஸ்பெயின் பிரதமர் பெட்ரொ சான்செஸ் பலமுறை கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
எனினும், ஸ்பெயின் பிரதமரின் கருத்துகளுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வரலாற்றின் தவறான பக்கத்தில் ஸ்பெயின் இடம்பிடிக்கும் என்றும் இஸ்ரேல் பதில் கூறியுள்ளது.