தடகள போட்டியில் 7 மாத கர்ப்பத்துடன் ஓடிய அசூர பெண்தடகள போட்டியில் 7 மாத கர்ப்பத்துடன் ஓடிய அசூர பெண்

ஃப்ளையிங் ஃப்ளவர்(பறக்கும் பூ) என்று சொன்னால் தடகள விளையாட்டுகளில் தெரியாதவர் இருக்க முடியாது. அமெரிக்காவைச் சேர்ந்த இவர், டெய்சி பூவைச் சூடிக்கொண்டு அசூர வேகத்தில் ஓடியதால் அலிசியாவுக்கு இந்தப் பெயர் சூடப்பட்டது. இவர் பல்வேறு தடகளப் பிரிவுகளில் தேசிய மற்றும் சர்வதேச சாதனைகள் புரிந்துள்ள ஒரு பெண்மணி ஆவார்.

கடந்த ஜூன் மாதம்,  7 மாத கர்ப்பிணியான அலிசியா யாரும் இதுவரை செய்திராத ஒரு துணிச்சலான செயலைக்  செய்தார்.  வயிற்றில் குழந்தையையும் சுமந்துகொண்டு ஓட ஆரம்பித்த அலிசியா, பதக்கம் எதுவும் பெற முடியவில்லை என்றாலும் அவரின் துணிச்சலைப் பாராட்டி, ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டினார்கள். போட்டியில் பதக்கம் பெற்றவர்களைவிட அலிசியாவுக்குப் புகழும் பாராட்டுகளும் குவிந்தன.

அலிசியாவின் பேச்சு:

“வயிற்றில் குழந்தையுடன் ஓடியதை எல்லோரும் சாதனையாக நினைக்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை’ என்றார். பின்னர்  உடல் பயிற்சிடின் நன்மைகள் பற்றி கூறினார்.

கர்ப்பமாக இருக்கும்போதும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள் என்றார்.

2008-ம் ஆண்டு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது, பாதங்களில் கடுமையான வலி. அலிசியாவால் நிற்கக்கூட முடியாமல் போனது. 1 வருடம் அவரால் எந்தப் போட்டியிலும் பங்கேற்க முடியாமல் போனது ஆனாலும் அவர் முடங்கிப் போய்விடவில்லை. சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, போட்டிகளையும் பயிற்சிகளையும் கவனித்தார். பின்னர்  தன்னுடைய தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தால் மீண்டு வந்த அலிசியா, 5 முறை தேசிய சாம்பியன் பட்டங்களை வென்றார். ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றார். இன்று அமெரிக்காவின் மிக வேகமாக ஓடக்கூடிய பெண் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார். 28 வயது அலிசியாவுக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆரோக்கியமான ‘லிட்டில் ஃப்ளையிங் ஃப்ளவர்’ பிறந்தது.

ஆசிரியர்