குளிரை தடுக்க முடியாது. ஆனால், அதை எதிர்கொள்ள, நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள முடியும். பெண்களின் மிக முக்கிய பிரச்னை உதடுகள் வெளிறி, எரிச்சல், வெடிப்பு ஏற்பட்டு, வறண்டு விடுவது.
* முகத்திலேயே மிகவும் மென்மையான தோல், உதடுகளில் தான் உள்ளது.
* அதனால், எளிதில் வெடிப்பு, ரத்தம் வடிதல், சிவப்பு நிறமாதல் ஏற்படும்.
* உதடுகளில் பாதுகாப்பு படலங்களான வியர்வை சுரப்பி, முடி கிடையாது.
* உதடுகளில் நாம் பயன்படுத்தும், ‘லிப் – பாம், மாய்ஸ்சரைசர்’ போன்றவை, எண்ணெயை அடிப்படையாகக் கொண்டு அமைவது நல்லது.
* சுவாசிக்கும் போது, வாயை விட, மூக்கால் அதிகமாய் சுவாசிப்பது நல்லது.
* சரும வறட்சியால் தான், உதடுகள் வெடிக்கும். நிறைய நீர் அருந்துவது நல்லது.
* உதடுகளை சுற்றி வெடிப்பு ஏற்பட்டால், ‘வைட்டமின் – பி2’ குறைவு என, அர்த்தம்.
* ‘பி2’ சத்துள்ள காய்கறிகள், உணவுகளை, போதுமான அளவு சாப்பிட வேண்டும்.
* பயன்படுத்தும், ‘லிப் – பாம்’களில், வெண்ணெய், ‘வைட்டமின் – இ’ அதிகம் இருக்கும் படி பார்த்துக் கொள்வது நல்லது.
* புகை பிடிப்பதால், உதட்டில் சுருக்கங்கள் தோன்றும். மது அருந்துவதால், அதிக வறட்சி ஏற்பட்டு, எரிச்சல் உண்டாகும்.
* சருமத்தின் ஈரப் பதத்தை பராமரிப்பதில், தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்காக, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிகளவில் பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொண்டால், நம் உடலின் செயல்பாட்டிற்கான தண்ணீரை, அது
வழங்கி விடும்.
* உப்பு சேர்க்காத வெண்ணெய், தேங்காய் எண்ணெய் உதட்டில் தடவலாம்.
* சுத்தமான பன்னீரை பஞ்சில் நனைத்து, உதட்டின் மீது அரை மணி நேரம் வைக்கவும். தொடர்ச்சியாக செய்யும் போது, வெடிப்புகள்
குணமாகும். கருப்பு நிறம் மறைந்து, இயற்கையான நிறம் மீட்கப்படும்.
* ‘லிப்ஸ்டிக்’ போடுவதை குறைத்துக் கொள்ளலாம்.
நன்றி : தினமலர்