சிறுகதை | சலனங்கள் எனி இல்லை | முல்லைஅமுதன்

ஒரு மம்மல் பொழுதில் தான் முதலில் சந்தித்தேன்.

முன் பின் அறிமுகமாயிருக்கவில்லை.

‘இந்த வழியால்தானே  இத்தனை நாளாய் போய்வருகிறேன். கண்ணில் படவில்லையே..

புதிதாய்   இங்கு வந்துள்ளவளோ?’

நெடுநேரம் காத்திருக்கிறாளோ?அடிக்கடி மணிக்கூட்டைப் பார்த்தாள்.

அவசரப் பயணமோ?

மனதுள் நினைத்தபடி அருகில் வந்தேன்.

நெற்றியில் ஒற்றை  மயிரொன்று  அசைந்தது  அழகூட்டியது.

கண்டதும் புன்னகைத்தாள்.

ஏதோ ஒன்றை  நட்பாய்  சொல்லியது போல இருந்தது.

தூரத்தே  புகையிரதம் போகும்  சத்தம் கேட்டது.

‘கன  நேரமாய்  நிற்கிறியளோ?’

‘ஓமோம்..பஸ்ஸும் வருகுதில்லை’  என்றாள்.

நடக்கிற தூரமென்றால் நடக்கலாம் தானே?- இது நான்.

மேலும் ஒரு புன்னகை..

‘போகலாம் தான்..ஆனால்..களைச்சுப்போன  இந்த  நேரத்தில நடக்கேலாது  தானே?’

நானும்  அங்காலதான் போறன்..பேசிக்கொண்டே போகலாம்..

எப்படி இந்த உரிமை வந்தது..

அவளும் வியந்தாள்..

ஒரு பயமுமெழுந்தது.

‘இந்த நேரத்தில..’

பரவாயில்லை..தனியாய்..’

அவளின் தயக்கம் புரிந்தது.

‘பரவாயில்லை..நான் நடந்தே போறன்..’

நடக்கத்தொடங்க..அவளும் பின் தொடர்ந்தாள்..ஒருவித குருட்டு நம்பிக்கையுடன்..

வழி நெடுக எதுவும் பேசவில்லை.

‘எங்கு வேலை செய்கிறீர்கள்?எங்கே உங்கள் வீடு? என்று இருவரும் கேட்கவில்லை..

நாதன் கடை வந்ததும் நடையைத் தளர்த்தி..

‘நான் இந்த ஒழுங்கையால் போகிறேன்..வீடு கிட்டத்தான்..நன்றி..கூட வந்ததற்கு’

‘நன்றி மட்டும் தானா.இவ்வளவு  தூரம் பாதுகாப்புடன் கூட்டிவந்திருக்கிறேன்..’

கேட்கவில்லை.

இருவரின் உதடுகளும் புன்னகையுடன் நகர்ந்தன.

*

வீட்டுக்குள்   நுழைந்ததும் சுசீலா  தேநீர் தந்தாள். வெந்நீர் எடுத்துவைத்திருந்தாள்.

மேசையில் சாப்பாடு அழைத்தது..

குழந்தைகள் தூங்கி வழிந்துகொண்டிருந்தார்கள்.

அவள் தந்த துண்டினால் ஈரக்கையைத் துடைத்தபடி குழந்தைகளுடன் அறைக்குள் போய் கட்டிலில் படுக்கையைத் தயார் செய்தேன்.

குழந்தையும் மகிழ்வுடன் தொப்பென்று விழுந்தது .

மெல்லியதாக இசையை ஓடவிட்டபோது..

மனதுள் ரம்மியமான நினைவுகள் வந்துபோயின.

‘இண்டைக்கு என்ன புதினம்?’

நான் கேட்டிருக்கவேண்டும்.

அவள் கேட்கிறாள்..

‘புதியதாய் ஒன்றுமில்லை..கிளார்க்  ஒருவர் மாற்றலாகி வந்துள்ளார்..வாற கிழமை  ஓடிற்   வரப்போயினம்.’

அவளும்  இசையின்  ஒலி அளவைக்  குறைத்தபடி தன்  அறைக்குள்  போனாள்.

*

மனைவியிடம் சொல்லிவந்தீர்களா?

அவளின்பெயர்வனிதா..நன்குபழகியவள்போலவேநடந்துகொண்டாள்

ஜன்னல்களை மூடியபடியே கேட்டாள்.

சேர்ட் பட்டனைக்கழற்றியபடி இருந்த எனக்கு அவள் கேட்டது திக்கென்றிருந்தது.

அவள் கேட்டது  ஏனோ மனதில் உறைத்தது.

கேட்டான்.

‘ஏன் அப்படிக் கேட்கிறாய்?’

‘இல்லை சும்மா தான்..?’

அவளே சொன்னாள்.

‘நீங்கள்  கவுண்டரில் ஐடியைக்  கொடுக்கையில்  உங்கள் மணிபேர்ஸ்ஸிலிருந்த  உங்கள் குடும்பப்புகைப்படமிருந்தது..அதுதான்..’

இவள் ஏன் அப்படிக் கேட்டாள். மனைவிக்குத் தெரிந்தவளாக இருக்குமோ? எங்காவது கோயிலில்,கடை வீதிகளில்,பயணத்தில் கண்டு மனைவியிடம் கதைத்துக்கொள்ள  வாய்ப்பு கிடைத்திருக்குமோ??

பிறகு, மணிப் பேர்ஸில்  கண்ட  குடும்பப்  படத்தைப் பார்த்தது  ஆறுதலடைந்திருந்தாலும்..மனதில் ஒரு 

மூலையில்  லப் டப் லப் டப்  என அடித்ததது.

நெருங்கிவந்து உட்கார்ந்து கொண்டு சேர்ட்டின் கடைசி பட்டனைக்  கழற்ற  உதவினாள்.

அழகி  அல்லது  பேரழகி என்று  சொல்லமுடியாவிட்டாலும்  மனதைக்  கிறங்க வைக்கும்  அழகு   என்று சொல்லலாம்.

பஞ்சாபி உடை மேலும் எடுப்பாய் இருந்தது.

மார்பும்சிற்பிசெதுக்கியதுபோலவேஎடுப்பாகஇருக்கும்படியாகஉடுத்தியிருந்தாள்.

மனது கவிதை பாடியது.

‘என்ன..அப்படி ரசிக்கிறீர்கள்?என்னிடம் என்ன அப்படி இருக்கிறது??’

விழிகளை உயர்த்தி கேட்டாள்

‘ஒன்றுமில்லை..நாம் சந்தித்த நாளில் இருந்து இன்று வரை நட்பு வளர்ந்து இன்று அருகில்..’

‘நானும்  எதிர்பார்க்கவில்லை.. நட்புக்கு  அப்பால் உங்களால்  கிடைத்த  நல்ல வேலையும் உங்களை அதிகம் விரும்பவைத்தது.”

‘அப்ப.. வேலை  வாங்கித்  தராவிட்டாலொன்றுமில்லையா?’

‘அப்படியில்லை.நட்பிற்கு முதலிடம் தான்..’

‘போதும்..போதும்..புகழாரம்…’

எனக்குள்ளும் ஏதோ ஊர்ந்தது.

அவளிடம்  ஏதோ வசீகரித்தது. இன்னும்  நெருக்கமாக  வந்தாள்.

குளித்துவிட்டு   வந்த வாசம் மனதுள்  இறங்கியது.

கைகளை எடுத்து  அழுத்திய போது  எதுவுமே  பேசாது மார்பில் தலையைப் பதித்தாள்.

இடது கையால் அவளின்  முகத்தைத்  தூக்கி  உற்றுப்பார்க்கையில்  மனதுள்  ஏற்பட்ட  குதூகலம் அவளுள்ளும்  ஏற்பட்டிருக்கவேண்டும்.

மூச்சில்  தெரிந்தது.

கட்டில்  மூலையில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பூக்கள் தங்களுக்குள் இரகசியம் பேசின.

மனதுக்கு ரம்மியமான  பிங்க் கலரிலான  திரைச்சீலை   ‘இன்னுமா ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறீர்கள்?  நான் காவலுக்கிருக்கிறேன் -என்பதுபோல இருந்தது.

சிரிப்பு வந்தது.

‘ஏன் சிரிக்கிறாய்?’

கணப்பொழுதுதான்

எதுவும்  பேசமுடியாதவாறு  அவளின்  உதடுகள்  உடலை  மேய்ந்தன.

காதலி அல்லது  நட்பின்  சுகானுபவமும், மனைவி தருகின்ற  சுகமும் ஒன்றெனினும்..எதில் அதிகம் என்று சொல்லவும் முடிவதில்லை..ஆனாலும்  இன்னும்..இன்னும்  அதிகமாகத் தேடவே   காமம் சொல்லிக்கொடுக்கிறது.

காமம் நட்பு சார்ந்தது,அதற்குத்தான் ஆத்மீகமாய் உறவைக்கொள்ளமுடியும். மனைவியிடமோ,தோழியிடமோ ஆன்மாவைத் தொடு ம் அளவிற்கு உறவுகொள்ளமுடியும்

ஒவ்வொரு  பெண்ணிடமும்  ஆண்  தோற்றுப்போகிற  இடமும்  இதுதான்..இங்குதான்.

வனிதாஎன்றால்அகராதியில்அர்த்தம்எனித்தான்தேடிப்பார்க்கவேண்டும்..இப்போதுஏன்நினைக்கத்தோன்றுகிறது?

பேசுவதற்கான மொழி வரவில்லை..

அவளிடம் கேட்க நினைத்ததைக் கேட்டபோது…

.ஓ இதுவா?’

மார்பிலும்,அடிவயிற்றிலும் தடவி விட்டபடி….’ஒரு மிருகத்தின் வேலை..இப்படி காயமாகிவிட்டது’

.வலிக்கவேயில்லையா?.

.’வலித்தும்  என்ன? வடுவாகி  இப்ப உங்கள் கண்ணிலும் பட்டுவிட்டது.’

‘அந்த மிருகம் குடிக்குமா? குடிபோதையில் தான் அப்படி..?’

‘குடிக்கும் தாம்.ஆனால் குடிக்காமலேயே அப்படித்தான்..’ அவள் அமைதியானாள்.

‘பெண்ணைப் பூப்போல பாவிக்கவேண்டும் என்பார்கள்..சிலர் ..இப்படி?’

என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

‘என்னிடம் மிருகத்தனம் இருந்ததா?’ கேட்கவேண்டும் போலிருந்தது.கேட்கவில்லை.

பேச்சை மாற்ற ‘காதலித்தா திருமணம் செய்தீர்கள்?’

‘இல்லை..இரு வீட்டாரும் பேசிப் பொருத்தம் பார்த்தே செய்தார்கள். ஆனால் எதிர்பார்த்தபடி எதுவும் அமைவதில்லையே?’

கண்ணில் கண்ணீர் அருவியாகியது.

அறைக்கு வெளியே பரபரப்பாகப் பேசிக்கொண்டு போவது கேட்டது.

‘யாரும் வந்து..? ‘கேட்டாள்.

‘சீச்சி..இது பாதுகாப்பான ஹோட்டல்.ரெயிட் வந்ததாகத் தகவல் இல்லை.கவுண்டரிலும் நாம் கணவன் மனைவி என்று நம்பியிருப்பார்கள்’

‘ம்’ கொட்டினாள்.

கழுத்துக்கும்  இடது பக்க காதுக்குமிடையே  வியர்த்து ஒழுகக் கண்டு  துடைத்துவிட முனைந்தபோது அவளே துடைத்துக்கொண்டாள்.

ஒன்றில் எனது மனைவி வரவேண்டும்  அல்லது உனது ஆள்  வரவேண்டும்…எனது மனைவி வரச் சாத்தியமில்லை..என்னை  முழுமையாக நம்புகிறாள்.நானும் அவளுக்கு எந்த விதத்திலும் குறைந்தவனில்லை என்பது போல நடந்துகொள்கிறேன்.அவளைப் பொறுத்தவரைக்கும் நல்ல கணவனாக இருந்துகொள்கிறேன்..இப்படி வரும் போது உறுத்தாமலுமில்லை’

அவள் குறுக்கிட்டாள்.

‘அவனுக்குப் பணமே பிரதானம்..ஒருவேளை வந்துவிட்டால்  பணத்தைப் புடுங்கிக்கொண்டு போய்விடுவான் என்றே நினைக்கிறேன்’ பெருமூச்சொன்றைவிட்டு மௌனமானாள்.

‘அப்ப இதுக்கு முந்தி..’ முடிக்கவில்லை..

அவள் கோபித்துக் கொள்வாளோ?

‘இல்லை. பத்துப்பதினைந்து வயதிலொரு தனிமையில் மாமா ஒருவனிடம் அப்படி நடந்துகொண்டேன்.  பிறகு அவனும் கார் விபத்தில் இறந்து போனான்.காலம் மாறியது..இவனுக்கு வாழ்க்கைப்பட்டு உண்மையாக இருக்கிறேன் என்று நம்புகிறேன்..உங்களைப்போல..’

‘நல்ல விளக்கம் தான் போ’

சிரித்துவிட்டாள்.

ஒரு வகையில் ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம் தானே?’

‘ம்’ என்றாள்.

‘என்ன ம் என்கிறாய்..?’

‘வந்தது பிழை என்று சொல்ல வாறீங்களா?’

‘கடிந்துகொள்கிறாளா?’நானே நினைத்து ‘சீச்சி அப்படி இருக்காது’ என்று சமாதானம் அடைந்துகொண்டேன்.

 எழுந்து கொண்டாள் தன்னை தயார்படுத்த..

‘போகவேண்டுமல்லவா?’

எங்கே அப்படி அவசரம்?’

கட்டில் கோபிக்கப்போகுது.. அது தான்’

கட்டிலுக்கு நல்லவேளை பேசமுடியாத நிலை..பேசினால் நிர்வாணங்களை,சில்மிஷங்களால் தன்னையும் தொல்லைப்படுத்துவது பற்றி சொல்லி அழும்”

சொல்லிச் சிரிப்பதை ரசித்தபடி  குளியலறைப்பக்கம் போனாள்.

குளியலறையிலிருந்து வந்தவள்  சிரித்தபடி கேட்டாள்.

சொல்லத் தொடங்கினேன்.

பதினேழு பதினெட்டு வயதில மாமி  வீட்டில் தங்கிப் படித்து வந்தேன்.ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் கிரிக்கட் விளையாட அல்லது திரைப்படம் பார்க்கப்போவது தவிர, மாமிக்கு ஒத்தாசையாகக் கடைக்குப் போவது,சோலைவரி போன்ற கட்டணங்களை கட்ட என சிறு சிறு உதவிகளைச் செய்வதுண்டு.இடையிடையே மாமியின் மகள் குமுதம்,ஆனந்தவிகடன் சஞ்சிகைகளை வாங்கிவரச் சொல்லுவாள்.அவள் கொஞ்சம் கறுப்புத்தான்.ஆனாலும் அதுவே அழகு தான்.

சில நூல்களை வாசிக்கக் கொடுத்தால் அவற்றை  முகம்  சுழிக்காமல் வாங்குவாள்.

வாசித்திருக்கமாட்டாள்  என்பது தெரியும்..எனினும் கொடுப்பேன்..அவளின்  ரசனை வேறு தான்.

இன்னமும்  ரமணிச்சந்திரனை, பாலகுமாரனை  விரும்பி  வாசிப்பவள்.

அவ்வப்போது  சுவாரஷ்யமான நாவல்களை  வாசிப்பாள்.அப்படிப்பட்டவளுக்கு இப்படியான  நாவல்களை வாசிக்கமாட்டாள்.

குனிந்து வாசிக்கும் போது நெற்றியில் படரும் கூந்தலை ஊதிவிட ஒன்றும் சொல்லமாட்டாள்.

செல்லமாக ரசிப்பாள். வாசிகசாலை நாடகத்திற்குப் பெண் வேடத்திற்காக அவளின் உடைகளைப் போட்ட போது சிரித்தேவிட்டாள்.

‘கோமாளி  மாதிரி இருக்கு’ என்பாள்.

இப்படிச் செல்லமாக சீண்டுவதும்,அவள் கடிந்துகொள்வதும் சகஜமாகிவிட்டது.

மாமியும் கண்டுகொள்ளவில்லை.

‘கெட்ட எண்ணத்திலான அவர்களது நடவடிக்கைகள் இல்லை ‘என்பதாக மாமி உணர்ந்தாள்.

இப்படி ஒரு நாள் குறும்பாகச் சுட்டு விரலால் அவளது  மார்பினை தட்டிவிட்ட கோபத்தில் அறைந்துவிட்டாள்.

நெற்றியில் வழிந்து விளையாடும் மயிரை நீவி விடுகையில்,காதில் செல்லமாக வள் செய்வதைப் போலவே ஊதிக் கூச்சத்தை வரவழைப்பது போலவே,கன்னத்தை அவள் கிள்ளுவதைப் போலவே இயல்பாக தடவிக்கொடுக்கையில்,கழுத்தில் தொங்கும் சங்கிலியை கையில் எடுத்து அழகு எனச் சொல்கையில் புன்னகைக்கும் அவள்,தெரியாமல் மோதிவிட சிரித்தபடி செல்பவள்,அருகருகாக ஒரே கட்டிலில் படுக்க சந்தர்ப்பங்கள் வரும் போதெல்லாம் இயல்பாகவே தங்கள் வீட்டின் அங்கத்தினன் என்கிற உணர்வுடன் புத்தகங்களை படுத்திருந்தபடியே வாசிக்கின்ற போதும்,அப்படியே தூங்குகையிலும் காட்டாத எரிச்சல்,கோபம் மார்பைத் தொட்டதும் ஏன் கோபங்கொண்டாள்..

அன்று முதல் அவன் தன் அறைக்குள் ஒதுங்கிக்கொண்டேன். யாருடனும் பேசாமல் மௌனமாகவே நடமாடியதை அவளுக்கும் உறுத்தியிருக்கவேண்டும்.

நாட்களாயின.

அவளாகவே அறைக்குள் வந்தாள்.

கட்டிலில் அமர்ந்த படி

‘என்னுடன் கோபமா?’

என்னிடமிருந்து மௌனமே பதிலாகக் கிடைத்ததால் அவளே தொடர்ந்தாள்.

‘அன்றைக்கு இருந்த  சூழ்நிலையில் எனக்குக் குறும்பாகத் தான் செய்கிறாய்  என்று புரியவில்லை. அதுதான் கோபம் வந்துவிட்டது.இப்ப பார்..என்னுடன் பேசு..கோபமிருந்தால் அடித்துவிடு..பழைய மாதிரி நீ இருக்கவேண்டும்..எனக்குப்பிடிக்காத,ஆர்வமில்லாத  புத்தகங்களைத்  தந்தும் வாசித்ததாக பொய் சொன்னேன்..இப்போது அவற்றையெல்லாம் உண்மையாகவே  வாசித்தேன்..உன்னைப் புரிந்துகொண்டேன்.நான் அப்படி நடந்திருக்கக்கூடாது. ‘சொல்லிக் கொண்டே அவள் சிரிப்பூட்ட முயன்றாள்..தலையைத் தடவிவிட்டாள்.தன்  தலைமுடியை முன்னுக்கு  இழுத்துவிட்டு’ இந்தா உன்  ஆசை  தீர  ஊதிவிடு..இதோ  கண்ணுக்கு மையிட்டிருக்கிறேன்…உதட்டுக்குச் சாயமிட்டுள்ளேன்..காதில்   ஆடும் தொங்கட்டானைப்பார்…உன் குறும்புக்காகக் காத்திருக்கிறது’

இன்னும் நெருங்கினாள்

ஒன்றும் வேண்டாமா? வா…முத்தத்தில சில்லுக்கோடு விளையாடலாம் இல்லாட்டிக்கு குண்டு ‘போல ‘

விளையாடலாம்’

எந்தவித அசுமாத்தமுமின்றி இருந்த என்னை நெருக்கமாக  வந்து அணைத்தாள்.

‘கொஞ்சம் சிரியேன்’

சிலிர்த்தேன்.

அந்த இறுக்கத்தின் ஊடே தன் உதட்டைப் பொருத்திமுத்தமிட்டாள்.

திமிறினேன்.

அவளின் இறுக்கம் மேலும் இறுகியது.

திமிறினேன்.

மூச்சு முட்டியது..

ஆண்மை விழித்தது.

வாழ்வின் முதல் முதலாக அவளிடம் என் ஆண்மையை   இழப்பதாய் உணர்ந்தேன்..

என் கட்டுப்பாட்டை இழந்துபோவதை உணர்ந்தேன்.

அவளின் அண்மை தேவையாகியதை உணர்ந்தும் எல்லாம் உடைந்துபோனது..

அவளின் நிர்வாணம்,அவளின் உடலிலிருந்து வந்த நறுமணம்,அவளுடனான முதலுறவு ஞாபகத்தில் நெடுநாளாய் கூடவே வந்தது.

நாட்கள் நகர்ந்தன..

மாமிக்கு ஏதோ சந்தேகம் எழத் தொங்கியது…

‘என்னவோ இருவருக்குமிடையிலும்..?’

ஒருநாள் அப்பா திடுதிப்பென்று வந்திறங்கிவிட்டார்.

ஒன்றும் புரியவில்லை..

‘மாமி என்னவோ போட்டுக்  கொடுத்துவிட்டாவோ?’

அப்பா எதுவும் பேசவில்லை..

‘வா..வெளிக்கிடு’

என்று மட்டும் ஒற்றையாய் சொன்னது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது..

மாமா எதுவும் பேசவில்லை…

‘என்னவோ  நாடகமெனக்குத் தெரியாமல் நடக்குது போல’ மாமாவின் முகம் சொன்னது போலிருந்தது..மாமி எப்படிப்பட்டவள் என்பது மாமாவிற்குத் தெரியாததல்ல.

காலை பதினொரு மணியிருக்கும்..

அப்பாவுடன் புறப்பட்டேன்.

‘கள்ளன்..களவெடுத்துப்போட்டு..அமசடக்கையாய்   இருக்கிறானே’

‘நான்  களவெடுக்கேல்ல..மாமி பழிவாங்குகிறாள்’என்று மட்டும் புரிந்தது.

திரும்பிப் பார்த்தேன்..

அவள் மாமியின் பின்னால் அழுதபடி நின்றபடி கையெடுத்துக் கும்பிட்டாள்.

‘அந்த விசயத்தைச் சொல்லிவிடாதே’ என்கிறாளா?

அப்பா தன் கைப்பிடியை இறுக்கியபடி நடந்தார்.

எனக்கும் அவளுக்குமான உறவை மாமி கண்டுபிடித்திருக்கலாம்..சண்டை பிடிக்காமல்,கலவரம் இல்லாமல்  காரியத்தைச் சாதிக்க நினைத்து நகையைக் காணவில்லை என்று பழியைப் போட்டு வீட்டை விட்டு அனுப்பிவிட்டு தன் வீட்டில் அமைதியை நிலைநாட்டியிருக்கலாம்.

காலம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டிருந்தது..

வருடங்களும் உருண்டோடிவிட்டது.

பிறகு..?

இவள்  சுயநினைவிற்குக் கொண்டுவந்தாள்..

அப்பாவும் எதுவும் கேட்கவில்லை..மாமியின்  நகைகளை களவெடுக்க  இவனுக்கு  வாய்ப்பில்லை..மாமி 

நாடகமாடுகிறா’   என்றுணர்ந்திருக்கவேண்டும்..

சில வேளை மாமா விளக்கமாக  அப்பாவிற்குச்  சொல்லியிருக்கலாம்.

மாமா மாற்றலாகி  குடும்பத்துடன்  சென்றுவிட்டனர்.

அவளுக்குத் திருமணமாகிவிட்டதாகவும் கேள்விப்பட்டேன்..சந்திக்கவேயில்லை..சந்திப்பதில்லை அல்லது சந்திக்கக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தேன்..

‘அப்போ  முதல் காதல்,முதல் முத்தம்…அதுக்கும்  மேலே முதலுறவு    மறக்கமுடியாதது..நீங்கள் குடுத்துவைச்சனீங்கள்..கன பேருக்கு இப்படி   சந்தர்ப்பம் கிடைப்பதில்லையே’

சொல்லிச் சிரித்தாள்.

சிரிக்க முயன்றேன்.

அறையைப்  பூட்டிவிட்டு  திறப்பைக் கவுண்டரில்  கொடுத்துவிட்டு  வெளியேறிய போது மழை பெய்யத்தொடங்கி இருந்தது

கொஞ்சம் இருளும் குவிந்திருந்தது

‘என்ன செய்வது?

ஒட்டோவில் போவோமா?

ஒட்டோவில் இருவரும்  ஏறிக்கொண்டனர்.

வழியில் எதுவும்  பேசவில்லை.  ஒட்டோக்காரனுக்கு  தமிழ் தெரியுமாதலால்   பிடிகொடுத்துவிடக்கூடாது

 என்பதில் கவனமாக இருந்தார்கள்.

இந்தச் சந்தியில்  நிற்பாட்டினால் அந்த முடக்குச் சந்திலுள்ள  தெருவால்  போய்விடுவேன்’ என்றாள்

இன்னும் தூரமிருக்குமே?-நாதன் கடை இன்னும் வரவில்லையே?’

பரவாயில்லை’

அவள் எதற்கோ பயப்படுவதாக  நினைத்துக்கொண்டு  அவளை வழியனுப்பி வைத்தேன்।

மழை இன்னும் விட்டிருக்கவில்லை।

&

தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கப்பால் சமூகம் சார்ந்த பயமிருக்கவே செய்யும்.நாங்களும் விதிவிலக்கானவர்களில்லையே.

கதவை திறக்கையில் மகள் வாட்டமாக ஓடிவந்து, 

‘ ஏன் அப்பா?எங்கே போனீங்கள்?என்னுடைய பிறந்தநாளை மறந்துவிட்டீர்களா?’

‘ஓ! சொறீம்மா..வேலை..மறந்துட்டேன்.. சரி…நல்லபிரசண்ட் வாங்கித்தாறன்.சிங்கப்பூர்  போவோம்..சரியா?’

‘ஓகே!’மகிழ்ச்சியானாள்.

வழமை போல வெந்நீர் தயாராகியது.

சாப்பாடு ரெடியாக இருந்தது.

படுக்கையில் -வந்து மௌனமாக வந்தமர்ந்தாள்..

ஸ்கூல் விடுமுறை பார்த்துப் போவோமா?

‘ம்’ மட்டுமே பதிலாக வந்தது.

பதிலில்  மகிழ்ச்சியாய் இல்லை என்பது மட்டும் புரிந்தது.

அணைத்துக் கொண்டான்..அவளும்  மறுப்புத் தெரிவிக்கவில்லை.

அம்மா உறவுகளிடம்  சொல்லி,தரகர்களிடம் சொல்லி அலுத்துப்போன நிலையில்கோயிலில்கண்ட அம்மாவின் பள்ளித்தோழியின்  மகளைப் பிடித்துப்போக  புகைப்படத்தைக்காட்டினாள்.

உன்  விருப்பமென்றேன்.

எல்லாப் பொருத்தங்களும் பார்த்தார்கள்.பிறகொரு நல்ல நாளில் திருமணமாயிற்று.

அம்மாவிடம் நிறைந்த மரியாதை இன்னும் வைத்திருக்கிறாள்.அம்மாவும் தன் மருமகளென்பதைவிட 

மகளெனப் பார்த்தாள்.

வீட்டிலும் அதிக சுதந்திரமிருந்தது.தேவையானதை வாங்கலாம்.எங்கும் சுதந்திரமாகப் போகலாம்.ஊரில் தன் உறவினர் வீட்டுக்கோ அல்லது தன் பள்ளித் தோழிகள் வீட்டிற்கோ சுதந்திரமாகப் போய்வந்தாள்.

அதே அளவு சுதந்திரம் எனக்கும் அவள் தந்திருந்தாள்.

மாதம் மாதம் சம்பளத்தை அவளிடமே    கொடுத்துவிடுகிறேன்.

அவளே வீட்டுப்பொருட்களை,குழந்தையின் செலவுகளைப் பார்க்கிறாள்.

மேலாக அவளிடம் அன்பாக இருக்கிறேன்.

மனைவியாகக் கிடைக்க நான் தவம் செய்திருக்கவேண்டும்.

ஆனாலும் ஏதோ என் மனதிலுறுத்தலாக என் தவறுகளும் சொல்லாத கதையாக உறுத்தலாக இருக்கிறது..

திரும்பி அவளைப் பார்த்தேன். .நிறைவான தூக்கத்தில் இருந்தாள்.

விளக்கை அணைத்துவிட்டு படுத்துக்கொண்டேன்.

 &&

ஒரு வாரம் நகர்ந்தது.

அலுவலக நிர்வாகம் சார்ந்த பட்டறைக்காகத் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தேன்.

புதிதாகப் பலரின் முகங்களைக் காணமுடிந்தது.முன்னர் பலமுறை வந்திருந்தாலும் இந்தமுறை புதிய உற்சாகமான முறையில் வரவேற்பு பலமாக இருந்தது. நிர்வாக அலகின் விரிவாக்கம்,புதிய கிளைகளின் வருகை தொழில்துறை சார்ந்தோரின் வரவேற்பு என்னையும் அவர்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறேனோ என நினைப்பதுண்டு.யாவரும் இன்முகத்துடன் வரவேற்றனர்.வழமையான விழாவாக அமையாது யாவரும் ஒரு குடும்பம் போலவும் யாவரையும் இணைக்கும் நிகழ்வாகவும் அமைந்திருந்தமை மகிழ்வாக இருந்தது.புதிதாய் வந்தவர்களும்  குதூகலத்துடன் நட்புடன் நெருங்கிவந்தார்கள்.அப்படி வந்தவர்களுள் ரகுவும் ஒருவன்..நன்றாக்க,நட்பாகப் பழகினான்.நிகழ்வு முடிந்து அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பிரத்தியேக விருந்திற்கும் அழைத்துச் சென்றான்.அங்கு அவன் அறிமுகப்படுத்திய அவனது தோழி மனதை வசீகரித்தாள்.பேசும் அழகு,உடலசைவு,உடலின் கட்டமைப்பு அவளுடன் பேசிக்கொண்டிருக்கலாமோ எனத் தோன்றியது. பேச்சின் நடுவே வீட்டிற்கு அழைத்திருந்தாள்.ரகு தான் வரவில்லை என்று சொல்லத் தனியே அவளுடன் போகவேண்டியதாயிற்று. தானே உணவைப் பரிமாறினாள்.உணவின்  நடுவே குவளையில் ஊற்றிய பியரைப் பருகியவண்ணம் இருந்தாள்.

நாகரிகமாக இருந்தாள்.முற்போக்கானவளாகத் தெரிந்தாள்.

திருமணமாகி விவாகரத்துப் பெற்றிருந்ததையும்,சிறிய மகள் தனது பெற்றோருடன் இருப்பதாகவும் சொன்னாள்.வேலைக்காரி வந்து எல்லா உதவிகளையும் செய்து தருகிறாள். அதனால் வேலைப்பளு தெரிவதில்லை என்றும் சொன்னாள்.

சகஜமாகப் பழகியதால் அவளுடன் பேசுவதற்கு முதல் இருந்த தயக்கமோ,சங்கடமோ பிறகு இல்லை.

என் குடும்பம் பற்றியும் சொன்னேன்.

ரசித்துக் கேட்டாள்.

நேரம் ஆக எனது அறைக்குப் போகவேண்டும் என்று எழுந்தபோது ‘இங்கேயே நில்லுங்களேன்..பேசிக்கொண்டிருக்கலாம்..’சொல்லி கொஞ்சம் கெஞ்சலாக ‘பிளீஸ்’ என்றாள்.கையைப் பற்றி இருந்துகொள்ளேன் என்பது போலிருக்க உட்கார்ந்துகொண்டேன்.

நிறையப் பேசினாள்.

நிர்வாகம்,அரசியல்,ஆங்கில நாவல்,திரைப்படம் எதையுமே விட்டுவைக்கவில்லை.

பின்னர் உடை மாற்றிவரச் சென்றாள்.அவனை ஒரு அறையைக் காட்டி இங்கு படுத்துக்கொள்லலாம்.நான் அடுத்த அறையில் தூங்கிக்கொள்கிறேன்.

இது கிச்சின்,,இது பாத்ரூம்..ஏதாவது தேவையெனில் அழையுங்கள். அறைக்குள் நுழைந்தாள்.

ஒரு மணியிருக்கலாம்.

தூக்கம் வரவில்லை என்று அறைக்குள் வந்தாள்.

அதிகம் பேசினாள்.அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

தனிமை,அழகு,இரவின் அமைதி எதையோ ஞாபகப்படுத்திக் கொண்டிருக்க  ‘மெல்லிய இருட்டிலும் அழகாய் தெரிகிறாய்’ என்றேன்.

ஒரு வாரம் நகர்ந்தது.

அலுவலக நிர்வாகம் சார்ந்த பட்டறைக்காகத் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தேன்.

புதிதாகப் பலரின் முகங்களைக் காணமுடிந்தது.முன்னர் பலமுறை வந்திருந்தாலும் இந்தமுறை புதிய உற்சாகமான முறையில் வரவேற்பு பலமாக இருந்தது. நிர்வாக அலகின் விரிவாக்கம்,புதிய கிளைகளின் வருகை தொழில்துறை சார்ந்தோரின் வரவேற்பு என்னையும் அவர்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறேனோ என நினைப்பதுண்டு. யாவரும் இன்முகத்துடன் வரவேற்றனர்.வழமையான விழாவாக அமையாது யாவரும் ஒரு குடும்பம் போலவும் யாவரையும் இணைக்கும் நிகழ்வாகவும் அமைந்திருந்தமை மகிழ்வாக இருந்தது.புதிதாய் வந்தவர்களும்  குதூகலத்துடன் நட்புடன் நெருங்கிவந்தார்கள்.அப்படி வந்தவர்களுள் ரகுவும் ஒருவன்..நன்றாக்க, நட்பாகப் பழகினான். நிகழ்வு முடிந்து அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பிரத்தியேக விருந்திற்கும் அழைத்துச் சென்றான். அங்கு அவன் அறிமுகப்படுத்திய அவனது தோழி மனதை வசீகரித்தாள்.பேசும் அழகு,உடலசைவு,உடலின் கட்டமைப்பு அவளுடன் பேசிக்கொண்டிருக்கலாமோ எனத் தோன்றியது. பேச்சின் நடுவே வீட்டிற்கு அழைத்திருந்தாள்.ரகு தான் வரவில்லை என்று சொல்லத் தனியே அவளுடன் போகவேண்டியதாயிற்று. தானே உணவைப் பரிமாறினாள்.உணவின் நடுவே குவளையில் ஊற்றிய பியரைப்  பருகியவண்ணம் இருந்தாள்.

நாகரிகமாக இருந்தாள்.முற்போக்கானவளாகத் தெரிந்தாள்.

திருமணமாகி விவாகரத்துப் பெற்றிருந்ததையும்,சிறிய மகள் தனது பெற்றோருடன் இருப்பதாகவும் சொன்னாள்.வேலைக்காரி வந்து எல்லா உதவிகளையும் செய்து தருகிறாள். அதனால் வேலைப்பளு தெரிவதில்லை என்றும் சொன்னாள்.

சகஜமாகப் பழகியதால் அவளுடன் பேசுவதற்கு முதல் இருந்த தயக்கமோ,சங்கடமோ பிறகு இல்லை.

என் குடும்பம் பற்றியும் சொன்னேன்.

ரசித்துக் கேட்டாள்.

நேரம் ஆக  எனது அறைக்குப் போகவேண்டும் என்று எழுந்தபோது ‘இங்கேயே நில்லுங்களேன்..பேசிக்கொண்டிருக்கலாம்…’சொல்லி கொஞ்சம் கெஞ்சலாக ‘பிலீஸ்’என்றாள்.கையைப் பற்றி  ‘இருந்துகொள்ளேன்’  என்பது போலிருக்க உட்கார்ந்துகொண்டேன்.

நிறையப் பேசினாள்.

நிர்வாகம்,அரசியல்,ஆங்கில நாவல்,திரைப்படம் எதையுமே விட்டுவைக்கவில்லை.

பின்னர் உடை மாற்றிவரச் சென்றாள்.அவனை ஒரு அறையைக் காட்டி இங்கு படுத்துக்கொள்ளலாம்.நான் அடுத்த அறையில் தூங்கிக்கொள்கிறேன்.

இது கிச்சின்,,இது குளியலறை..ஏதாவது தேவையெனில் அழையுங்கள். அறைக்குள் நுழைந்தாள்.

ஒரு மணியிருக்கலாம்.

தூக்கம் வரவில்லை என்று அறைக்குள் வந்தாள்.

அதிகம் பேசினாள்.அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

தனிமை,அழகு,இரவின் அமைதி எதையோ ஞாபகப்படுத்திக் கொண்டிருக்க  ‘மெல்லிய இருட்டிலும் அழகாய் தெரிகிறாய்’ என்றேன்.

புன்னகைத்தாள். அவளின் இரவின் உடை இன்னும் கவிதையாக இருந்தது.

‘தூக்கம் வந்தால் உறங்குங்கள்..நான் தொந்தரவு செய்யவில்லை.. போகிறேன்’ அவள் கூடவே இன்னும் கொஞ்சநேரம் இருந்தால் பரவாயில்லை போலிருந்தது.

‘இல்லை..உட்கார்’ இது நான்.

பேசிக்கொண்டே இருந்தவள் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கினாள்.

எழுந்து அவளை நெருங்கி அவளது அறைக்குச் சென்று தூங்கட்டுமே என்று தோள்களைத் தாங்கியபடியே அழைத்துச் சென்றபோது..தூக்கத்திலேயே  சேர்ந்தபடி நடந்தாள்…விழுந்துவிடுவாளோ என்று  அவளின் கைகளை இறுகப்பற்ற அவள் தூக்கத்திலேயே என்னை இறுகப்பற்றினாள். அப்படியே அணைத்தபடி அவளது கட்டிலில் படுக்கவைத்தபோது அவளை அறியாமல் என் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டது.

நான் எதிர்பார்க்கவில்லை.அவள் அருகிலேயே உட்கார்ந்தபோது   அவளின் பிடி  இன்னும் ..இன்னும் இறுகியது. அவளின் அருகில் தூங்கும் படியாயிற்று.அதிகாலையிலேயே  எழுந்துகொண்டேன்

அவள் இன்னும் தூக்கத்தில்  தான்..  அவளைத் திரும்பிப்பார்த்தேன்.

நிர்மலமான முகம்..நிம்மதியாகத்  தூங்குகிறாள்.

விடிந்தது.

வேலைக்காரி இன்னமும் வரவில்லை.

கிச்சின் பக்கம் போய் தேநீர் அவளுக்கும் சேர்த்துத் தயாரித்தேன்.இரவே கிச்சினைக் காட்டியிருந்தமையால் இலகுவாய் இருந்தது.

அவள் எதிர்பார்க்கவில்லை.

‘என்ன? நீங்களே தேநீர் தயாரித்துவிட்டீர்களா?’

‘ ம்..ம்’

பருகிக்கொண்டே உற்றுப்பார்த்தாள்.

எதையோ எதிர்பார்ப்பது போலக் கண்களில் தெரிந்தது.

‘இரவு வழமைக்கு மாறாக நன்றாகத் தூங்கமுடிந்தது..எல்லாம்..நீங்கள்..?’

வார்த்தைகளை முடிக்கவில்லை..மெல்லியதாக உதடு பிரிந்து புன்னகைத்தது.

உட்காரச்சொன்னாள்.

எதை எதிர்பார்க்கிறாள்?

நெருங்கினாள்.

தனிமை பலவித கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டது.

மூளைக்குள் மின்னலடித்தது.

என் கையை எடுத்து தன் அடிவயிற்றில் வைத்தாள்.உள்ளங்கை வியர்த்தது.

‘பயமா? இங்குதான் யாருமில்லையே. ஏன் பயம்?’

‘வேலைக்காரி வந்துவிடுவாளே?’ நாக்குளறியது.

வார்த்தைகள் வரமறுத்தன.

‘அவள் வரமாட்டாள்.லீவு..’

‘அ..அ அப்படியா.?

‘விருப்பமில்லையா?.அப்ப வேண்டாம்’

என்னிடமிருந்து எந்தப் பதிலேதும் வரவில்லை.

அக் கணப்பொழுது இருவருக்கும் சாதகமாகவே அமைந்தது.

நேரம் நகர  வீட்டு நினைப்பு வரத்தொடங்கியது.

குளித்துவிட்டு வந்தவள்..’என்ன பலமான யோசனை?..புதிதாய் ரவலைத் தந்தாள்.

மௌனமாக பாத்ரூமை நோக்கி மெதுவாக நடந்தேன்.

சாப்பாட்டைத் தானே பரிமாறினாள்.

போகும் போது ‘மறக்கமாட்டீர்களே?’கேட்டாள்.

‘இல்லை..’

‘மனைவியை ஞாபகம் வந்துவிட்டதா?.முகம் அப்படி இருக்கிறது..’

மனைவியின் முகம் ஏன் இப்போது ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது.

தாலியின் பலம் சற்று அதிகம் தான்.மறக்கமுடியாதபடி உணர்வில் கலந்துவிடும் ஒரு உறவு மனைவி..

வழமைக்கு மாறாக மனதில் ஒரு உறுத்தல்…

‘மறக்கமாட்டீர்களே என்று இவள் கேட்டாளே?’

காதுக்குள்  ‘கன காலத்திற்குப்பிறகு இப்படி உங்களுடன்..நிறைய நன்றி’ என்றாளே.

‘இதே  உணர்வைத்தானே  மனைவியும் தருகிறாள்?’

காமமும்,காதலும் வாழ்வில் ஒவ்வொரு மனிதனையும் பூரணப்படுத்துகிறது.

ஆனாலும் பூரணத்துவமென்று சொல்லிக்கொண்டாலும் ஏதோ ஒன்றில் குறை இருக்கிறதோ என நினைக்கத்தோன்றுகிறது..முழுவதுமாக பெண்களிடம் குறை இருப்பதாகச் சொல்லிவிடமுடியாதுதான்.ஆனாலும் ஆண் மட்டும் பிற பெண்களிடம் சந்தர்ப்பம் கிடைக்கும்போது போய்வருகிறானே.ஏதோ ஒரு விதத்தில் நிறைவுறாத வாழ்வியல் அனுபவத்தை வேறொரு ஆணிடம் பெற முனைகிற பெண்களும் இருக்கிறார்களே.என்னைப் போன்றவர்களை எந்த ரகத்தில் சேர்ப்பது?

சூழல் களத்தை ஆண் பெண் இருவருக்கும் அமைத்துக்கொடுக்கிறதா?’

நடையில் ஒரு தளர்வு தெரிந்தது.

மீண்டும் மனைவியிடம் முகம் கொடுக்கவேண்டும்…ஏன் இன்று தவிக்கிறதாய் மனமிருக்கிறது?

புரியவில்லை..

குளிர் அடித்தது.எனினும் வியர்த்தது.

அன்று இரவும் தூக்கம் வரவில்லை..

மனைவியைத் திரும்பிப் பார்த்தேன்..அவள் எந்த கலவரமுமின்றித் தூங்கிக்கொண்டிருந்தாள்.

அம்மா சொல்லிச் சென்ற தகவலும் மனதை அரித்தது.

மாமியின் மகள் பயணத்தின் போது வாகனம் விபத்துக்குள்ளாகி அவளது கணவன்  இறந்ததாகச் சொன்னாள்பாவம் அவள்..எவ்வளவு கற்பனைகளுடன் வாழ்ந்திருப்பாள்..முன்பொருநாள் கண்ணீருடன் வழி அனுப்பிவைத்தது இன்னும் ஞாபகத்திலிருந்தது..

‘நான் கள்வனில்லை..’மனதுள் கூரான கத்தி கீறி குருதி வழிந்தது போல உணர்வு..

மகிழ்ச்சியாய் இருந்திருப்பாளா?

விதி ஏன் இப்படி அவளைச் சோதித்திருக்கிறது?

அவள் முதலில் கர்ப்பமானதை மாமி அறிந்ததும் அதிர்ச்சியானாள்.தாங்கிக் கொள்ளமுடியவில்லை.அதுவும் அவளிலேற்பட்ட மாற்றத்திற்குக் காரணம் யாரெனத் தெரிந்ததும் இன்னும் அதிகமாகக் கோபம் என்மீதே வந்திருக்கவேண்டும்.கோர்வையாக அவளுக்கு எல்லாம் புரியத்தொடங்க ‘நம்பித்தானே வீட்டுக்குள் அனுமதித்தோம்…நன்றாகப் படிப்பான்  என்பதால் கூடுதல் கரிசனை கொடுத்து வீட்டில் நம்முள் ஒருவனாகவே நடத்தியும்..இப்படி..? ‘அதனால்தான் மாமி பொய்யாகக் கள்வனெனப் பழிபோட்டு அப்பாவுடன் அனுப்பிவிட்டிருந்தாள். பின் யாருக்கும் தெரியாமல் கருச்சிதைவு செய்து அவளைச் சமாதானப்படுத்தி வேறொரு திருமணமும் செய்துவைத்துவிட்டாள்.பின்பொரு நாள் நண்பனொருவன் சொல்லித்தான் தெரிந்தது.

நெஞ்சுக்குளிக்குள் வலித்தது.

எழுந்து போய் கதவைத் திறந்து வாசலுக்கு வந்தேன்..

மயான அமைதி…

ஒவ்வொரு உடல்களைத் தழுவும்போது அவரவர் உடல்களிலிருந்து நுகரப்படும் சுகந்தம் அல்லது மணம்  வித்தியாசமாகத்தான் இருக்கும்.அதனை உள்ளுணர்ந்து அனுபவிப்பவனுக்கு உலகமே தன் வசமென நினைக்கத் தோன்றவே செய்யும்.இது அனுபவங்களைப் பகிரும் இருபாலாருக்கும் பொருந்தும். அந்த சுகமான அனுபவம் எந்த நிலையிலும் நின்று நீடிக்கும்.

ஒருவருடன் அனுபவங்களைப்பெறுகையில் அந்த அனுபவ வெளிப்பாடு பிறரிடம் பெறுதலொன்றாக இருக்குமா? ஆயின் அந்த நறுமணம்,அனுபவம் என்னைப்போலவே அவர்களுக்கும் இருந்திருக்குமா?

அப்படியாயின் அந்த உள்ளுணர்வு இவளுக்குக்குள் உணரப்பட்டிருக்குமா?

மனைவியுடன் தனியே இருக்கும் போது கன்னம் தொட்டு..கழுத்தில் இறங்கும் முத்தம்

இன்னும் எனக்கேட்கும்..கூடவே அவளின் சுகந்தம் வசீகரிக்கும்..இயற்கையான உடலின் மனம்..அவள் குளிக்கையில் பாவித்த சோப்பின்

 மணம்..என்னுள் நுழைய ஒரு கணம் மனது நினைத்தது..அவளுள்ளும் இப்படி நினைக்கத்தோன்றுமா?

 அதே சமயம் எனது நேற்றைய யாருடனோவான உரசல்களை, உணர்வுகளை அவள் உணர்வாளா?

அப்படி உணர வாய்ப்பில்லாமல் இருக்குமா?இதுவரை அவள் இது பற்றிக் கேட்டதேயில்லை…தெரிந்திருப்பாளோ?முகம் சுழிக்காமல்தானே தன்னைத் தருகிறாள்.

‘அப்பா!’

நினைப்புத்  தடைப்பட்டது.

மகளின் பிஞ்சுக்கைகளை என் கைகளுக்குள் பொத்தியபடி வாஞ்சையுடன் அணைத்தேன்.அவளின் பின்னால் நின்ற மனைவி புன்னகைத்தாள்.

‘அப்பா செல்லம்’ மனைவியின் கண்கள் சொல்லியது.

‘அடுத்த லீவுக்கு டூர் போகிறோமல்லவா?’

‘ம்’ 

இந்தமுறை ஏமாற்றக்கூடாது..போயே ஆகவேண்டும்..

பலவிதமான பாத்திரங்களின் கூட்டுக்கலவையே மனிதன்.

அப்பாவாய்,அண்ணாவாய்,அம்மாவாய்,தம்பியாய்,அக்காவாய்,தங்கையாய்,மாமனாய்,மாமியாய் ….

கருணை,அன்பு,பாசம்,வன்மம்,தியாகம்,கோபம்,காதல்,காமம் இணைந்தே மனிதன் பயணிக்கிறான்..நானும் அப்படியே.

வாழ்க்கை மிருதுவாகவோ,கடினமாகவோ அமையலாம்.மேடுபள்ளங்கள் நிறைந்தவையே.அங்கு எதிர்பார்ப்பும்,ஏமாற்றமும் இல்லையெனில் வாழ்வின் தேடல்ஸ்தம்பித்துவிடும்.

பிள்ளையின் கனவு மனைவிக்குமானதுதான்.காலம் முழுதும் சேர்ந்திருக்கவேண்டும்…பிரிவு வந்துவிடக்கூடாது.ஒவ்வொரு தடவையும் சொல்லிச் சொல்லி அவை நடக்காமல் ஏமாற்றமடைந்துவிடுகையில் எல்லாம் உடைந்துபோவதாய் கணப்பொழுதில்

‘ச்சே…என்ன வாழ்க்கை?’

வார்த்தைகளும் மனதைப்போலவே உடைந்து உடைந்து வரும்.

கணவன்என்றபாத்திரத்திற்குப்பொருத்தமானவா?இவள்எனக்குப்பொருந்துகிறபாத்திரமா? பலதடவைசிந்தித்ததுண்டு.நட்பாய்இருக்கிறபெண்களுடன்காமத்தைப்பகிர்ந்துகொள்கிறகணவனைமனிதனாகஏற்றுத்தான்வாழ்கிறாளா?இல்லையெனில்அவள்இந்தக்காலத்துப்பெண்ணல்லவாஉடைத்துவிட்டுப்போயிருக்கமாட்டாளா?ஆயின்என்னுடன்வாழ்ந்துகொண்டிருக்கிறவள்நிச்சயம்பெண்தெய்வம்தானோ??அம்மாவின்தெரிவும்சரிதானே.நிச்சயம்அம்மாவின்தெரிவுசரியாகத்தான்இருக்கும்.அப்படியானால்அம்மாவும்தான்குழப்படிகாரன்என்றுதெரிந்துவைத்திருப்பாளா?கால்கட்டுப்போட்டுவிட்டால்எல்லாம்சரியாகிவிடும்என்றுநினைத்தாளோ?

மகள்தோளைக்கட்டிக்கொண்டாள்.

‘அப்பா’ செல்லமாகக்கொஞ்சினாள்.

பூனைகள்சண்டையிடுவதன்ஒலிகாதைத்துளைத்தது.தன்காமத்தைக்கொட்டித்தீர்க்கமுயல்வதன்எதிரொலியாகவோஇருக்கலாம்.இருவருக்கும்சிரிப்புவந்தது. 

‘என் உயிர் நீ தானே’ கதைப்புத்தகத்தை வாசித்த குறையாக மேசைமீது மனைவி வைத்திருந்தது கண்ணில் பட்டது.உள்ளுக்குள் சிரிப்பு வந்தது.வாசிப்பது அவளுக்கு பிடித்தவைகளில் ஒன்று.

‘எனக்கும் வாசிக்கும் பழக்கம் இருந்தது.இப்போது வேலை வீடு,பயணம் என காலம் மாற்றிவிட்டதால் முடியாது போயிற்று.’

வாசிப்பதால் தான் இவளாலும் என்னைபோன்றவர்களை சமாளிக்க முடிகிறதோ?சில கதைகளின் நாயகன் போல நானும் இருக்கலாமோ?கோபப்படாமல் என்னை தன் புன்னகையால் வசீகரித்தபடியும்,அம்மாவை,மகளை அன்பாக உபசரித்து தன்னையும் நிதானமாக நகர்த்திச் செல்வதில் இவளுக்கு நிகர் இவளே.

அம்மாவின் இருமல் சத்தம் கேட்டது.

&&

அம்மாஅப்பாவின்மாதச்சம்பளத்திலேயேகுடும்பநிர்வாகத்தைக்கவனித்தாள்.பெரிதாகச்சேமிப்புஏதும்இல்லை.ஆங்காங்கேகடனுக்குவாங்கும்மளிகைச்சாமான்களுக்கும்கொடுத்தவைபோகஇடிக்கும்.எனினும்தன்னையும்குடும்பத்தையும்இக்கட்டில்ஆழ்த்திவிடாதவாறுசமாளித்தாள்.எம்மைஆளாக்கிவிட்டதின்பெருவெற்றியாளர்அம்மாவேஎனத்துணிந்துசொல்லலாம்.ஒருகட்டத்திற்குமேல்அப்பாவால்முடியாதபோதுஅம்மாவீட்டுத்தோட்டத்தில்ஆர்வம்காட்டினாள்.அதுவேஓரளவிற்குவீட்டின்சமையலைசமாளிக்கமுடிந்தது.

பெரியப்பாவெள்ளாமைமுடிந்ததும்மூட்டைநெல்லைகொண்டுவந்துதருவார்.பெரியம்மாவெங்காயம்,மிளக்காய்எனஅறுவடைகாலத்தில்வரும்போதுகொண்டுவந்துவீட்டைநிரப்பினாள்.அப்பாவும்யாரிடமும்கையேந்தியதில்லை.கடவுளின்மீதானபக்திகாப்பாற்றும்என்றும்நம்பினார்.வீட்டில்ஆடு,மாடுஇருந்ததினால்பால்,தயிர்எனக்குறைவில்லாமல்வரஅப்பாதன்இயலாமையால்வருந்தும்இடத்தில்அம்மாவிடவில்லை.அப்பாஇல்லைஎனஒருநாளும்வந்துபோனபின்அம்மாதான்எல்லாம்ஆனது.

அம்மா..நெஞ்சுவலிஎனஇப்போதுஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

அம்மாதான்எல்லாம்..எல்லாவற்றையும்பொறுத்துக்கொள்பவள்.பொறுமைதான்என்னைவளர்த்தெடுத்தது.அதேபொறுமைதான்தன்மருமகளுடன்ஒத்துப்போகவும்வைத்துள்ளது.என்தவறுகளையெல்லாம்தெரிந்துவைத்திருக்கலாம்அல்லதுதெரியாமலேயேஇருந்திருக்கலாம்.இதுவரைஎதுவும்கேட்கவில்லை.

‘அம்மா’ நினைத்துப்பார்க்கவேமனதுதாங்காமல்நோவெடுத்தது.தலைவலியென்றுகூடபடுத்ததில்லை..மனைவிமீதானஅன்பு,பேரப்பிள்ளையுடனானகரிசனை,பாசம்அவளைதாங்கிற்று.நோயென்றுவிழுந்துவிடாமல்தாங்கியதுஎன்றேசொல்லவேண்டும்.

டாக்டர்கள்வந்துபார்த்துப்போனார்கள்.மாறிமாறிதாதிகள்கூடஇருந்துகவனித்தார்கள்.உடலைக்கழுவ,உடைகளைமாற்றமனைவியும்உதவினாள்.

அறையில்மருந்துநெடிஅவ்வப்போதுநாசியைத்தாக்கியது.திரைச்சீலையைவிலக்கிப்பார்த்தால்நிறையநோயாளிகள்…’கூடுவிட்டுஆவிபோனால்கூடவேவருவதென்ன?’ பாடல்ஞாபகம்வந்தது.ஆஸ்பத்திரிக்குஒருநாள்வந்தாலேபாடலும்கூடவந்துவிடுகிறது.

சுடுதண்ணீர்முடிந்துவிடபிலாஸ்கைஎடுத்துசுடுதண்ணீர்எடுத்துவரவெளியேவந்தேன்.

டாக்டர்கள்புன்னகைத்தபடிசென்றனர்.சிலதாதிகளின்முகத்தில்கடுப்பேதெரிந்தது.ஒருஇளம்டாக்டரைச்சுற்றிபட்டாம்பூச்சிகளைப்போலபெண்உதவியாளர்கள்சூழ்ந்திருக்கடாக்டர்அவர்களுக்குவிரிவுரைநிகழ்த்திக்கொண்டிருந்தார்.

வெளியேபார்வைநேரம்வரும்வரைகாத்திருப்போரும்,மருந்துஎடுத்துக்கொண்டுபோகும்நோயாளிகளும்,இறந்தஉடல்களைப்பொறுப்பேற்கக்காத்திருப்போரும்,போகும்வரும்அவசரவண்டிகளின்சத்தமும்பரபரப்பாகஇருந்தசூழலில்கடைக்குள்நுழைந்தேன்.

மீளவந்தபோதுஅறையில்வனிதாநின்றிருந்தாள்.

திகைப்புஏற்படபரபரக்கமுழித்தேன்.

‘இதென்னடா..பாம்பைசெத்தைக்குள்விட்டுவிட்டேனோ?’

அம்மாவிடம்சொல்லியிருப்பாளோ?மனைவிக்குத்தெரிந்திருக்குமோ?ஆனால்அம்மாவினதும்,மனைவியினதும்முகங்களில்ஒருவிதஅசுமாத்தமும்இல்லையே..மறைக்கப்பழகிக்கொண்டார்களோ?

வனிதாவின்கண்கள்என்னைஊடறுத்துப்பார்ப்பதுதெரிந்தது.

‘சொல்லிவிட்டாயாஎனக்கண்களால்கேட்கவேண்டும்போலிருந்தது.சொல்லியிருந்தாலும் ‘சொல்லவில்லையே’ என்றுதான்சொல்லுவாள்.

அப்படிச்சொன்னாலும்என்னநடந்துவிடப்போகிறது?கோபத்தால்சண்டைமூழும்..சண்டைமுற்றிவிவாகரத்தில்முடியும்…இப்படிஏன்மனதுகேவலமாகநினைக்கிறது.அம்மாவின்மனதுதாய்மையின்வடிவம்..இதுவரைகோபித்துமனைவியைப்பார்த்ததில்லை..

தவறுவிட்டவன்நான்..ஏன்தண்டனையைஏற்கமறுக்கிறது?சூழலைசந்திக்கமனம்ஒப்புதில்லை.

‘கடவுளே..இக்கட்டானநேரத்தில்நல்லசூழலைஉருவாக்கு..ஒன்றும்நடந்துவிடக்கூடாது’

மகளைஅழைத்துக்கொண்டுமனைவிபாத்ரூம்போனாள்.வனிதாவின்பார்வைஅகலவில்லை..புன்னகைத்தபடிநின்றிருந்தாள்.’நெருங்கிவிட்டேன்’ என்கிறாளோ?

மனதுஅலைபாய்ந்தது.

குற்றம்செய்துவிடுபவர்கள்அக்குற்றத்தைசரியெனவேதீர்மானித்துவிடுகிறார்கள்.மாறாக,குற்றங்கள்கண்டுபிடிக்கப்படும்போதுநிலைகுலைந்துவிடுகிறர்கள்.

தங்களுக்குச்சாதகமாகவேஎல்லாம்அமையும்எனவும்சிந்திக்கிறார்கள்.அமையவில்லையாயின்நிலகுலைந்துபோய்விடுகிறார்கள்.

‘நான்என்னசெய்யப்போகிறேன்?எதையும்எதிர்கொள்ளப்போகிறேனா?’

அறைகுளிர்ச்சியாகஇருப்பினும்வியர்த்தது.

சன்னலூடாகபார்த்தேன்.மனைவிதூராமய்ப்போய்மறைந்தாள்.

‘எப்படிஇவைசாத்தியமாயிற்று?’ வனிதாதற்செயலாகவந்திருக்கலாம்.அனால்இப்படிஅன்னியோன்யமாகபழகியவர்கள்போல…

வனிதாசகஜமாகப்பழகுபவள்தான்.இவர்களுக்குமுன்நின்றுகொண்டு ‘என்னைப்பார்.கண்களைப்பார்’ என்பதுபோலஅழகுகாட்டும்தைரியம்…கேட்டுவிடவேண்டும்எனதுமனதுதுடித்தது.வாரத்தைகள்வெளிவராமல்அடங்கிப்போகிறது.

அம்மாவேஉடைத்தாள்.

‘உன்ர மனுஷியோட கோயிலில கண்டு பழக்கமாம்.அடிக்கடி கண்டு கதைக்கிறவையாம்.புருஷனோட பட்ட கஷ்டங்களையெல்லாம் சொல்லி அழுததாம்.உடம்பெல்லாம் காயமாம்.பாவம்..கடவுள் இவளைப் பாடாப்படுத்துகிறது..வீட்டையும் ஒருக்காலோ இரண்டுதரமோ வந்திருக்கிறாள்.நீ வெளியூருக்குப் போயிருந்தாய்.இப்பவும் பார் இவளைக் காயப்பட அடிச்சுப்போட்டான்..மருந்தெடுக்கவந்த இடத்தில எங்களைக் கண்ணுட்டு வந்துநிற்குது’

அம்மா சொல்லச் சொல்ல மனம் படம் போட்டது.

சொல்லியிருப்பாளோ?

சொல்லமாட்டாள்..

தவறு இருவரிடத்திலும் தானே?அவளும் குற்றவாளிதானே?

மனது எப்படியெல்லாம் தப்பிக்க முனைகிறது…

அவளிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லையே.

உள்ளுக்குள்ளேயே சோகங்களையும்,நோவுகளையும் புதைத்துவிட்டிருக்கிறாளா??எம்முடன் இருக்கையில் பாதுகாப்பாய் உணர்கிறாளா??

பேச்சை மாற்ற ‘புருஷன் இப்ப எங்கே?’

அம்மாவே சொன்னாள்..

‘பொலிஸ் பிடிச்சுக்கொண்டு போட்டுது.இவளும் எத்தனை நாளைக்குப் பொறுத்துக்கொள்ளுறது.அதுதான் வேண்டாம் என்று தனித்து நிற்கிறாள்’

‘ம்..ம்ம்’ என்றேன்.வார்த்தைகள் வரவில்லை.

‘இவளுக்கு வேலை இருக்கிறது..நாங்களும் பாதுகாப்பு கொடுப்போம். உன்ர மனுஷியும் அப்படியே சொன்னாள்’

ஆமோதிப்பது போல மனைவியும் வந்து நின்றாள்.

மகளும்மகிழ்ச்சியுடன்ஒட்டிக்கொண்டாள்.நெருங்கியதோழிபோலமனைவியும்அவளுக்குஆதரவாகஅருகில்சென்றுநின்றுகொண்டாள்.

சூழ்நிலையைஊகித்தபோதுமனைவிக்கோ,குழந்தைக்கோஒன்றும்தெரிந்திருக்கவாய்ப்பில்லையோஎன்றுதோன்றியது. ஆனால்அம்மாவைநம்பமுடியாது.அம்மாசிலசமயம்அமசடக்கிஎனத்தெரியும்.ஆயின்அம்மாவுக்குத்தெரியாமலிருக்கவாய்ப்பில்லை.அம்மாமறைக்கிறாளா?அவள்எதுவும்சொல்லவில்லையா?மகள்குழந்தை.அவளுக்குப்புரியாது.மனைவியும்மறைக்கிறாளா?தன்னுடன்வைத்திருப்பதேபாதுகாப்பானதுஎன்றுநினைகிறாளோ?

தடுமாறினேன்..வலிந்துசிரிக்கமுனைந்தேன்.அவர்களுக்காகஆமோதிப்பதுபோலநடித்தேன்என்றுதான்சொல்லலாம்.எச்சரிக்கைஉணர்வுமேலோங்கியிருந்ததைஉணர்ந்தேன்.

தாதிஎதற்கோவந்துசென்றாள்.

டாக்டர்கள்அவசரஅவசரமாகஅங்கும்இங்கும்ஓடிக்கொண்டிருந்தார்கள்.கவனம்அதில்முழுமையாகசெலுத்தமுடியவிலை.

அம்மாவேசொன்னாள்..

‘எனக்குஓரளவுக்குசுகமாகஇருக்கு..நீங்கள்புறப்பட்டபயணத்தைஎனக்காகநிறுத்தவேண்டாம்.குடும்பம்முக்கியம்.குழந்தைஇன்சந்தோசம்அதைவிடமுக்கியம்.உன்ரமனுசிவளர்ந்தவள்.படிச்சவள்.பண்புநிறைந்தவள்…எல்லாவற்றையும்புரிந்துகொள்வாள்.இவள்எனக்குத்துணையாகஇருப்பாள்..திரும்பிவந்தாப்பிறகுபார்ப்போம்..இவள்ஏங்களோடஇருக்கட்டுமாஅல்லதுபகலில்வந்துட்டுபோகாட்டுமா?எனஎல்லோரும்சேர்ந்துமுடிவெடுப்போம்’ முடித்தாள்.

வனிதாவின்முகம்பளிச்சென்றிருந்தது.

பொறியில்அகப்பட்டநிலையில்நான்இருந்தேன்.

பொறியிலிருந்துதப்பிக்கநான்மாறவேண்டும்.இல்லையெனில்எல்லாம்உடைந்துநொருங்கிவிடும்.உடைந்தகண்ணாடித்துண்டுகளைப்பொருத்திக்கொள்ளவும்முடியாது.

‘அவள்எங்களுடன்தான்இருப்பாள்’ அம்மாவின்உறுதியைகுலைத்துவிடவும்முடியாது.

காலம்யாருக்காகவும்காத்திருப்பதில்லையே.

நம்மைசிலசமயங்களில்தன்பாட்டில்ஏறிமிதித்தபடிகடந்துபோய்விடும்காலத்தைஇழுத்துப்பிடித்துசரிசெய்யஅவகாசமும்கிடைப்பதில்லை.நிதானமாகசெய்யவேண்டியவற்றைசரிவரமுடிக்காமலும்,அவசரமானவற்றைதள்ளிப்போட்டுகலங்கிநிற்பதும்நாம்தானே.

மகளின்பிஞ்சுக்கரம்பட்டுஅவளைப்பார்த்தேன்.கள்ளங்கபடமற்றமுகம்..மனதில்எதுவுமேஇல்லாதபூவுடல்..அலாக்காகதோளில்தொங்கமுனைவதில்முயன்றுகொண்டிருக்க..குனிந்துமெதுவாகஅணைத்தபடிதூக்கினேன்.

கன்னத்தில்மகிழ்வுடன்கொஞ்சினாள்.

அறையைவிட்டுபோகையில்அம்மாசொல்லிக்கொண்டிருந்தாள்.

‘வாழ்க்கைஅழகானது.அப்பா,அம்மா,மனைவி,குழந்தை,நண்பர்கள்,கூடபயணிப்பவர்கள்யாவருடனும்மகிழ்வுடன்,வஞ்சகமின்றி,அன்புடன்பயணித்தாலேவாழ்க்கைசொர்க்கம்தான்’

வீதிவெறுமையாகஇருந்தது.

வீதிவெறுமையாகஇருந்தது.

சிறுகதை | உறவுகள் | முல்லை அமுதன் - Vanakkam London

முல்லைஅமுதன் (12/)9/2020)

(யாவும்கற்பனை)

ஆசிரியர்