செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் காதல் எனும் கலை | கேசுதன்

காதல் எனும் கலை | கேசுதன்

0 minutes read

வான்வெளி தனில் முகம் புதைத்து
ரசித்திடும் நெஞ்சத்து ரணங்களை
நேசத்து மீட்சியாய் வடிவிழந்து
தவிக்கும் அவன் நெஞ்சமும்
வானத்து தேவதையும்
வந்துதித்தாள் அவன் வாழ்வுதனில்
வற்றாத பாசமும் கொண்டமர்ந்து
வாடிய மலருக்கும் துளிநீர் சொறிந்தாள்

பூவும் தேன்சிந்தும் விண்மீனும் கீழிறங்கும் போலும்
அவள் பார்வை ஒளிவீசும் திசையில்
கார் கொண்ட நீங்குழலால் கண்ணசைவில் புரட்டினால் அவன்
நெஞ்சமும் பாசமெனும் படுகுழியில் வீழ்ந்தான்
கடைசியில் கனகமும் பூங்காவனமாய் மிதந்தது
புன்சிரிப்பாள் புதைத்தாள் அவன் நெஞ்சை
தன் உணர்வறியா தவித்து சிக்கினான் சீதை மணவாளன்
புயங்களும் பூப்பூக்கவே பொன்மாறன் புன்னகையில் சீர்குலைந்தான்
தவிடுபொடியாகிய தருணம் தாலாட்டு பாடிய தாயும்
நினைவில்லை போலும்

போகும் இடமெல்லாம் கனவுகளை கவ்விச்சென்றான்- அவள்
கயவர் முன் கரிகாலனாய் உருமாறினான்
மாற்றங்களும் மறுத்தாலும் மாறியே செல்லவோம் என
பல கனவுகளையும் அவள்முன் தொலைத்தான்
கூட்டுவிட்டு கூடுபாயும் குட்டி சாத்தானாய்
இருவர் உள்ளத்திலும் குடிபூந்தனர்

ராஜ்யங்களை கட்டிய ராஜாவாக்ககளாய்
மாபெரும் கனவு சாம்ராஜ்யம் உருவானது
நிலவொளிதனில் ரட்சிக்கும் ப்ரம்மைதனில்
சொல்லாது சிறைப்பட்டான் காதல் எனும் கலைதனில்…..

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.