4
பரீட்சை பெறுபேறுகளால்
உங்களை அளந்துவிட முடியாது
ஆனால் பரீட்சை இல்லாது
வாழ்க்கை இருக்காது
எது உங்களுக்கான வினாத்தாளென
இந்த உலகில் தீர்மாணிக்க இயலாது
முடிந்தவரை முயற்சி செய்
தோல்வி தொடரும் போது
அனுபவத்தை நிறைத்து வை
வென்றவனை பாராட்டு
உனக்கும் இலக்கு உண்டு
உணர்ந்து கடந்துவா தடை உடைத்து
நீ கண்ட வலி
நீ கடந்த வழி
நீயே அமைத்த வழி
மற்றவருக்கு பாதை காட்டும் இனி
வட்டக்கச்சி வினோத்