செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நான் | வசந்ததீபன்

நான் | வசந்ததீபன்

0 minutes read

வானத்தை இழந்தவன்
சூரியனை இழந்தவன்
நிலாவை இழந்தவன்
அதிகாலைகளை ,
அந்திகளை, இரவுகளை, பகல்களை இழந்தவன்
மரம் ,செடி , கொடிகளை இழந்தவன்
மலைகளை , வயல்களை , பள்ளத்தாக்குகளை இழந்தவன்
நதிகளை , கடல்களை இழந்தவன்
நிலத்தை , நீரை , காற்றை இழந்தவன்
தாயை இழந்தவன்
தந்தையை இழந்தவன்
சகோதர, சகோதரிகளை , நண்பர்களை , உறவுகளை இழந்தவன்
உணவை இழந்தவன்
உரிமையை இழந்தவன்
மொழியை இழந்தவன்
புத்தகங்களை இழந்தவன்
எழுதுகோல்களை இழந்தவன்
பேச்சுரிமை , வாக்குரிமை இழந்தவன்
கனவுகளை இழந்தவன்
மகிழ்ச்சி , சந்தோஷம் , ஆனந்தம்
யாவற்றையும் ஒரு சேர இழந்தவன்
அமர , நிற்க , ஓட , இளைப்பாற
தன்னுரிமையை இழந்தவன்
மனிதனாக வாழும் வாழ்வை இழந்தவன்
ஒரு உயிர் ஜீவியாக இப் பூமியில்
தரிக்கும் தார்மீகத்தை இழந்தவன்
இல்லை …இல்லை…இல்லை…
இழந்தவன் இல்லை …?
பறிக்கப்பட்டவன் …ஆம் பறிகொடுத்தவன்
இன , மொழி துவேசத்தால்.

வசந்ததீபன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.