தீராத தாகத்தோடு
தீரன் திலீபன்
தவம் இருந்தான்
நல்லூர் வீதியிலே.
நாலுபேர் கூடி
வரும் வீதியில்
நானிலம் நடுங்கிட
நாடு திரண்டது.
ஏனிந்த சாகரம்
சாவினைத் தோளில்
ஏனிப்போது சுமந்து
நடக்கிறான் திலீபன்.
கொள்கைப் பிடிப்போடு
கொடி கொண்ட நாடு
ஈழத்தின் பாடு கண்டு
தீர்வு கேட்டு நடத்தினான்.
தேடிவந்தவர் எல்லாம்
தேகம் வாடிக் கிடக்கும்
திலீபன் நிலை கண்டு
நிலைகுலைந்து போகிறார்.
ஒவ்வொரு நாளும்
இருள் மறைந்தொரு
பொழுது விடியும் போது
செய்தி என்ன கேட்கிறார்.
நாளுக்கு நாள்
திலீபன் உடல்நிலை
உருக்குலைந்து போக
உயிர் மௌனமாகிறார்.
இறுதிவரை இந்தியா
இறுமாப்போடு இருந்திட
இளம் வீரனவன்
இறந்து போகிறான்.
அகிம்சை போதித்த
அகிலத்து பெரிய நாடு
அந்தரிக்க விட்டு
பார்த்தது அந்நாடு.
தனக்கொரு சுதந்திம்
தரணியில் கேட்காது
தன்னின விடுதலைக்கு
உயிரீந்து கொடுத்தார்.
பன்னிரு நாட்கள்
தண்ணீரும் உணவும்
தான் விடுத்தேகி திலீபன்
நோன்பிருந்து உருகினான்.
இலவு காத்த கிளியாக
இரவுபகலாய் பார்த்து
கண்முன்னே திலீபன்
சாகவிட்ட சோகம் எரிந்தது.
ஈழத்தமிழினம் அது
இருக்கும்வரை இது
மறந்து போகும் நிகழ்வல்ல.
மனதுள் நிறைந்து போகும்.
நதுநசி