செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் காதல் நயம் தேடு!காதல் நயம் தேடு!

காதல் நயம் தேடு!காதல் நயம் தேடு!

0 minutes read

அபிநயக் கணகளால்
கவிநயம் பேசிவிட்டு
காதல் நயம் தேடாது
தொலை தூரம் நிற்கிறாய்!

கண்ணடித்துக் கைதொட்டு
உன்னடியில் வீழவைத்து,
காணாதது போலின்று
ஏனோ நீ ஏய்க்கிறாய்!

மலைத்தேனது வாலிபத்தேன்!
வலை விரித்தால் வயோதிபம்
வாலிபத்தேன் தொலைந்திடும்!
காலியாகு முன்னர் களித்திடு! மன்மத இளமையின்
கன்னல் காதல் வயல்.
மின்னி மறையும்
பின்னல் காதல்நிலா.

தேர்ந்திட்ட காதல் நூலகத்தில்
கண்களே  கருமூலம்.
காதலின் கருவூலம்
ஒருமித்த இதயங்கள்.

நதிமூலம், ரிஷிமூலம்
குருமூலமற்ற மந்திரம்.
போதனைகளற்ற வசீகரம்.
சாதனையூன்றுகோல் காதல்.

கடலளவு உள்ளத்தில்
கையளவு ஆசையேன்!
நேசநறும் தேனருவியை
வாசமாய் ஓடவிடு!

 

 

நன்றி : பதிவுகள் இணையம் | வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.