செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கவிதை | ஏக்கம் | முல்லை அமுதன்கவிதை | ஏக்கம் | முல்லை அமுதன்

கவிதை | ஏக்கம் | முல்லை அமுதன்கவிதை | ஏக்கம் | முல்லை அமுதன்

1 minutes read

கிணற்றில்

நீர் அள்ளும் சத்தம் கேட்க புரண்டு படுப்பேன்..

அம்மா

அள்ளிய சாம்பலின்

மணம் மூக்கை

தொடும்.

 

‘அம்மா’ அப்பாவின் செல்லபிராணி

கத்தும்.

அம்மா

தேநீருடன்

வந்து எழுப்புவாதானே?

மனது ஏங்கும்.

 

தங்கைகளின் கலகலப்பு

அறையை நிறைக்கும்.

‘சனியள்’

கொஞச நேரம் தூங்க விடாதுகள்.

மனது புறுபுறுக்கும்..

‘எழும்பு…கடைக்குப் போய்

பாண் வாங்கிவா?

அம்மா கத்துவாள்.

ஏன் நானே போகோணும்?

திரும்பிப்படுப்பேன்.

 

சுதந்திரம் பறி போனதாய்

உணர்வு.

வாளியில தண்ணியைக் கொண்டு வந்து ஊத்துவன்

எழும்பு..

அம்மா செய்தாலும் செய்வா..

அரை மனதுடன்

சிணுங்கியபடி

எழும்ப

அக்கா

வானொலியை திருகிவிட..

பொங்கும் பூம்புனல்

காதுள் விழும்.

 

அம்மாவின் சத்ததை விட

இது

பரவாயில்லை.

மனது சொல்லும்..

 

அப்பா

தயாராகிவிட்டார்..

ரலி வண்டி விறாந்தையில் உருளும்.

முற்றத்தில்

பிலாக்காய்

காகம் கொந்தி மணக்கும்.

 

அம்மா…

என்றெழ

மகள் கை தொட்டாள்..

 

எல்லாம் ..எல்லாம் போயிற்று…

அப்பா,

அம்மா,

தங்கைகள்,

அக்கா,முற்றத்து பிலா மரம்…

ரலி சைக்கிள்..

அம்மாவின் சத்தம்,

அப்பாவின் உறுமல்..

வீட்டுப்பிராணிகளின்

சத்தங்கள்..

வீட்டுக்குள்

வந்து எச்சமிட்டுச் செல்லும்

அம்மா வளர்த்த கோழி…

மனது கனத்தது..

 

மகளை

பள்ளிக்கு

அழைத்துச் செல்லவேண்டும்…

 

 

– முல்லை அமுதன் –

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.