செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ஆயுள்கைதி! | கவிதை | புகழ்விழிஆயுள்கைதி! | கவிதை | புகழ்விழி

ஆயுள்கைதி! | கவிதை | புகழ்விழிஆயுள்கைதி! | கவிதை | புகழ்விழி

0 minutes read

படைகள் வந்து எதிர்த்தாலும்
பயமின்றி நிற்ப்பவன் !

பலவித ஆயுதங்கள்கொண்டாலும்
போருக்கு அஞ்சாதவன் !

தடைகள் தொடர்ந்து வந்தாலும்
தோல்வியில்லை எதிலும் !

ஆயிரம் தடைகள் தகர்த்தவனை
ஆயுதமின்றி தோற்க்கடித்தாயே !

வன்முறையாய் பல போரிட்டவனிடம்
விழிகளால் போரிட்டாயே !

இமை மூடாது போரிட்டு
இதயத்தை வெற்றிக்கொண்டாயே !

இமயமென நின்ற வீரமகனை
இதயச்சிறையில் அடைத்தாயே !

அஞ்சா நெஞ்சன் உன்னிடம்
ஆயுள்கைதி ஆனானே !

மீள வழியிருந்தும் அவனிடம்
மீண்டுவர எண்ணமி்ல்லையே !

காதல் சிறையில் பூட்டிக்கிடக்க
காலம் முழுதும்

அவளின் காதல் கட்டளைக்கு
அடிமை ஆனானே !

 

நன்றி : புகழ்விழி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.