Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் சொற்களில் சுழலும் உலகமும் ‘காலம்’ 30வது ஆண்டு இதழ் அறிமுகமும்

சொற்களில் சுழலும் உலகமும் ‘காலம்’ 30வது ஆண்டு இதழ் அறிமுகமும்

4 minutes read

காலம் சஞ்சிகையின் 30வது ஆண்டு சிறப்பு இதழும் (54வது இதழ்) செல்வம் அருளானந்தம் அவர்கள் ‘எழுதிய சொற்களில் சூழலும் உலகம்’ எனும்  நூல் விமர்சனமும் 01/03/2020 அன்று  ஸ்காபரோ சமூக மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வை ஊடகவிலாளர்  கந்தசாமி கங்காதரன் அவர்கள் ஆரம்பித்து வைக்க எழுத்தாளரும் நாடக விமர்சகருமாகிய ப ஸ்ரீஸ்கந்தன் தலைமை தாங்கி நடத்திவைத்தார்.

நிகழ்வில் தேடகம் அமைப்பின் ஆரம்பகர்த்தாக்கள் ஒருவரும் நாடகருமாகிய பா.அ.ஜயகரன் அவர்கள் காலம் சஞ்சிகை, அதன் ஆசிரியர் செல்வம் அருளானந்தம் அவரது இலக்கிய பணி ஆகியவற்றின்  முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார். விமர்சகர் அருள்மொழிவர்மன் காலம் சஞ்சிகையின் 30வது ஆண்டு சிறப்பு மலர் பற்றி விமர்சன உரை ஆற்றியிருந்தார்.

அவர் தனதுரையில் 2000களில் ஆரம்பிக்கப்பட்ட சிற்றிதழ்கள் பல தொடர்ந்து வராமல் தனது வயதை குறைத்து இடையிலேயே நின்று விட்டது பற்றியும் அப்படி தொடர்ந்து வருகின்ற சிற்றிதல்களில் அதுவும் புலம்பெயர் தேசத்தில் ‘காலம்’  இதழ் 30 ஆண்டுகளாக தொடர்ந்து வருவது என்பது ஒரு சவாலான விடயம் என்பதையும் பொருளாதார பலமும் ஆட்பலம் இல்லாது தனி ஒரு மனிதனின் உழைப்பாக காலம் சஞ்சிகை வெளிவருவது மெச்சத்தக்க விடயம் எனவும் அப்படியிருந்தும் சஞ்சிகையில் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் அல்லது அதன் இருக்கும் சில குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் ஒரு முயற்சியையும் காலம் ஆசிரியர் கவனிக்க வேண்டும் என்றும் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து செல்வம் அருளானந்தம் அவர்கள் எழுதிய ‘சொற்களில் சூழலும் உலகம்’ எனும் நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.  பேராசிரியர் சந்திரகாந்தன் அடிகளார் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். செல்வம் அவர்களது எழுத்துக்கள் எம்மினத்தின் குறிப்பிட்ட ஒரு கால வரலாறு  அடங்கி இருப்பதாகவும் பல ஆண்டுகள் கடந்து அதை பேசப்பட வேண்டிய ஒரு பதிவாக இது அமைந்து இருப்பதாகவும் கூறினார்.

சிவதாசன் அவர்கள் தனது உரையில் செல்வம் அவர்களுடைய நீண்ட கால நட்பாக இருப்பதனால் அவரது பண்புகள் அனைத்தையும் அறிந்து இருப்பதனால் இந்தக் கதையில் வரும் மொழிப் பிரயோகம் என்பது செல்வம் அவர்கள் நாளாந்தம் கதைக்கும் போதும் மற்றவர்களுடன் உரையாடும் பொழுது பாவிக்கும் மொழி ஆக அமைந்திருப்பது ஒரு சிறப்பாக உள்ளது என்றும் இது தலைமுறை கடந்தும் இந்த மொழிப்பயன்பாடு கடத்தப்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து எழுத்தாளரும் நாடக நடிகையும் அரசி விக்னேஸ்வரன் அவர்கள் தனது பார்வையில் இந்த ‘சொற்களில் சூழலும் உலகம்’ எனும் நூலினை எந்த வகைக்குள் அடக்கி விடுவது என்பது தெரியாது உள்ளது என்றும் இது கட்டுரைகளா, சிறுகதைகளா  அல்லது புனைவா  என்று வகைப்படுத்த முடியாது உள்ளதாகவும் யாரையுமே சுட்டிக்காட்டாது   40 வருட கால நமது வரலாற்றை எம் போன்ற இளம்  சந்ததியினருக்கு தந்துள்ளார் என்றும் தனதுரையில் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியத்துறையில் மிக முக்கியமாக கருதப்படும் ஓவியர் மருது அவர்கள் செல்வம் அவர்களின் பெரும்பாலான கதைகளுக்கு ஓவியம் வரைந்தவர். அவர் இந்தக் கதையை வாசிக்கும் பொழுது தனக்கிருந்த அனுபவத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்கள் தன்னிடம் ஆவலோடு அடுத்தடுத்த கதைகளை எதிர்பார்த்து  காத்திருந்தாகவும் குறிப்பாக இந்திய வாசகர்களுக்கு  தெரியாத பல வரலாற்றுத் தகவல்களை இந்த கதைகள் சுட்டி வைத்ததாகவும்,   இப்படியான ஒரு நூலின் உருவாக்கத்தில்  தனது  பங்களிப்பும் இருப்பது  மிகுந்த மகிழ்வைத் தருகிறது என்றும்  தனது உரையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து எழுத்தாளரும் ஊடகவியலாருமாகிய பொன்னையா விவேகானந்தன் அவர்கள் செல்வம் அவர்களின் கதைகளுக்கு தான் அடிமை என்றும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல கதைகள் அவரிடம் இருக்கிறது அவற்றை தொடர்ந்தும் அவர் எழுதவேண்டும் குறிப்பிட்டார்.

இறுதியாக  செல்வம் அருளானந்தம் அவர்கள் தனது ஏற்புரையில்  இந்த கதைகள்  செவி வழியாக ஒவ்வொருவரும் சொல்ல கேட்டதாகவும்  இந்த கதைகளை கேட்ட பின்னர் தன்னால்  உறக்கம் கொள்ள முடியாது இருந்ததாகவும் அவற்றை பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வம்  தன் மனதை குடைந்துகொண்டு இருந்தாலும் இதனை  எழுத்தில் கொண்டு வந்ததாக கூறினார்.  எல்லோரிடமும் ஒரு கதை உண்டு.  அந்தக் கதையை அவர்கள்  சொல்ல செவி வழியே கேட்டு   அதே செவி வழியே விட்டு விடுவதும் உண்டு. ஆனால்  அந்த கதைகளுக்குள் இருக்கும் உண்மைத்தன்மை, வலி, அதன் முக்கியத்துவம்  இவற்றை பதிவு செய்தால்தான் மற்றவர்களும் அதனை வாசித்து  அறிந்து கொள்ள முடியும் என்ற நோக்கத்திற்காக  இவற்றை பதிவு செய்தேன்.  இக்கதைகள் வெளிக்கொண்டுவர காரணமாகவிருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

-கனடாவில் இருந்து கொன்றை வேந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More