எங்கள் பண்பாட்டின்
ஆன்மீக அடையாளமாய்
நிமிர்ந்த நல்லூர் முருகா!
நின்
பெருந்திருவிழா அழகில்
நெஞ்சு நிமிரும் நாளுக்காய் காத்திருந்தோம்
இன்று
நின் தரிசனம் காண
அடையாள அட்டை
இன்னுமின்னும் பற்பல நிபந்தனைகள்
அந்தக் கிருமிக்கு அவ்வளவு வல்லமையா…
650 பேர் சோதனை செய்து
300 பேருக்கு மட்டும் அனுமதியாம்!
எனது எண் 301 ஆனால்….
நெஞ்சு தளர்ந்தேன்!
நெஞ்சுக்குள் நின் அழகு
தரிசனம் காணும்
நினைவிலே அமைதி காண்பேன்!!
– சண்முக பாரதி