வெயில் குளிக்கும் தலைகள் | வில்லரசன் கவிதை

சூரியன் கோபிக்க
தொடங்கிய காலையொன்றில்
சப்தமிட்டபடி அணிவகுத்தனர்
ஜனங்கள்..

மாவோவின் நடைபயணத்தை
விட நீளமாய் நின்ற அவர்களுக்கு
தேவையாய் இருந்தது
எரிபொருள் மட்டும் தான்.

முதலில் அட்டைகளுக்கு மட்டும்
அனுமதி என்றனர்
பின்னர் இலக்க முறைக்கு
ஏற்பாடு என்றனர்..

எல்லா ஏற்பாடுகளும்
வாய்ப்பாய் அமைந்தது
இடைத்தரகர்களுக்கும்
இடைநுழைபவர்களுக்குந்தான்

இரவுகள் பகல்கள் ஆனாலும்
பகல்கள் இரவுகள் ஆனாலும்.
நிரப்பு நிலையங்கள் மட்டும்
நிரம்பி வழிகின்றன
காத்து கிடப்பவர்களின்
கண்ணீரால்.

வில்லரசன்

ஆசிரியர்