எனது கிராமம் | பா.உதயன்

ஒரு காலம்
உயிரோடு இருந்தது
எனது கிராமம்

எந்தப் பயமும் இல்லாமல்
எப்போதும் ஒரு பூ
பூத்தபடி இருந்தது

யுத்தம் வந்தது
தின்று முடித்தார்கள்
ஆக்கிரமிப்பாளர்கள்
நிலத்தையும் அங்கு பூத்து நின்ற
நம் வாழ்வையும்

இங்கு இப்போ
காவலரண்கழும்
இராணுவ முகாம்களும்
புத்தர் சிலைகளும்
முளைத்திருக்கிறது

ஈ போல் மொய்த்திருக்கிறது
எங்குமே இராணுவம்
இரவை பயப்படுதிக்கொண்டும்
சப்பாத்து சத்தங்கள்
நாய்களை தூங்க விடாமல்
நம் வீட்டுக்கு அருகில் எப்போதுமே

அங்கு வாழ்ந்த மக்கள்
இப்போ அங்கே இல்லை
தனித்து நிற்கின்றன
பனை மரங்கள்
அருகில் இருந்தவனை காணாமல்

மிஞ்சியிருந்த
எம் நிலத்தையும் கடலையும்
எவர் எவருக்கோ
விற்று விட்டார்கள்

நாமும் தானே
விட்டு விட்டு
நாடு நாடாய்
வந்து விட்டோம்

அது தான் அந்த மண்ணுக்கு
ஆத்திரமும் கோபமும்.

பா.உதயன்

ஆசிரியர்