June 2, 2023 12:09 pm

எல்லாமே எதுகுமே மாறும் வாழ்வு தான் | பா.உதயன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

எல்லாமே எதுகுமே மாறும் வாழ்வு தான்
இதுக்காக மனிதருக்குள் இத்தனை ஆசையா
இருப்பதெல்லாம் போகும் என்று அறியவில்லையா
இதற்கு தான ஆசைப்பட்டாய் மனிதா

வந்த சொத்து இருக்கும் என்று கனவு கண்டாய்
அது வரும் வழியே போகும் என்று அறியவில்லையா
ஆசை பாசம் எல்லாம் கூட மாறும் வாழ்வு தான்
மூச்சு அடங்கிக் போனா அது சும்மா வேஷம் தான்

முதுமை என்று வந்து விட்டால் முழுதும் அடங்கும்
அட போகும் போது கூட வரும் நாலு தடி தான்
வந்த வழி தெரிகிறது போக வழி இல்லை
எந்த வழி போவதென்று இன்னும் குழப்பம் தான்

பாசமும் பணமும் கூட மாறும் வாழ்வு தான்
இது பகல் இரவு போல வரும் காலம் போலத் தான்
எல்லாமே தெரிந்தவர் போல் சில மனிதர் பேசுவார்
எதுகுமே தெரியாதென்ற சூத்திரம் அறியார்

இளமையும் அழகும் கூட நிரந்தரம் இல்லை
இருக்கும் இந்த அழகு கூட மாறும் நிலை தான்
இலை துளிர்ப்பதும் உதிருவதும் போல வாழ்வு தான்
இது காலம் எழுதும் கதை போல வாழ்வு எல்லவோ

நிரந்தரமே எல்லாம் என்று நினைத்திருந்தாயா
எல்லாமே எதுகுமே கொஞ்சக் காலம் தான்
நமக்கு இருப்பதெல்லாம் மாறும் வாழ்வு தான்
அட நாம கூட காலம் சொல்லும் வாழ்வு தான்

காலம் கூட மாறும் இது கணக்கு போலத் தான்
பூவும் காயும் பூப்பதுவும் உதிர்வதுவும் மாறும் வாழ்வு தான்
காடு கடல் நதியும் கூட மாறும் வாழ்வு தான்
மனிதன் வாழ்வு கூட இயற்கை போலான வாழ்வு தான்

எல்லாமே எதுகுமே நாம் ஆடும் நாடகம் தானே
அந்த நாடகத்தில் நம்ம வாழ்வு கொஞ்சக் காலம் தான்
இது போகு மட்டும் ஆடுவது நம்ம வாழ்வு தான்
இதை போட்டு உடைத்து வாழுவதும் நம்ம வாழ்வு தான்.

பா.உதயன் 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்