ஆண்கள் அவதானம் இந்த அறிகுறி உள்ளதா

புற்றுநோய்களில் பலவகை உள்ளது அதில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவது நுரையீரல் புற்றுநோயால்தான். நுரையீரல் புற்றுநோய் என்பது அதிகளவு புகைபிடித்தல் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் ஏற்படுகிறது.

அதிகளவு புகையிலை பொருட்களை பயன்படுத்துவது நுரையீரலை பாதித்து நாளடைவில் புற்றுநோயாக மாறிவிடும். மேலும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் மற்றும் அதன் வகைகள் பற்றி பார்போம்.

சுவாசப் பாதையில் அடைப்பு

நுரையீரல் புற்றுநோயால் சுவாசப் பாதையில் அடைப்பு இருந்தால் அல்லது மார்பு பகுதியில் உள்ள நுரையீரல் கட்டியில் இருந்து திரவம் வெளிவந்தால், சுவாசிப்பதில் மாற்றத்தைக் காணக்கூடும்.

மூச்சு விடுவதில் சிரமத்தை சந்தித்தால் அல்லது வேகமாக சுவாசித்தால், அது நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

தொடர்ச்சியான இருமல்

ஒருவருக்கு இருமலானது ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக இருந்தால் அது நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

எனவே தொடர்ச்சியான வறட்டு இருமல் அல்லது சளியுடனான இருமல் வந்தால், சாதாரணமாக விட்டுவிடாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

இருமலில் மாற்றம்

புகைப்பிடிப்பவராக இருந்து இருமலின் போது இரத்தக்கசிவு அல்லது அசாதாரண அளவில் சளி வெளியேற்றம் போன்ற சமயங்களில் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

மார்பு வலி

நுரையீரல் புற்றுநோயினால் வரும் மார்பு வலி மற்றும் அசௌகரியத்திற்கு மார்பு சுவற்றில் உள்ள வீக்கமடைந்த நிணநீர் முடிச்சுக்களில் உள்ள வீக்கத்தினால் தான் ஏற்படுகிறது.

மார்பு வலி கூர்மையாகவோ, லேசாகவோ, தொடர்ச்சியாகவோ அல்லது இடைவெளி விட்டோ வந்தால், உங்கள் மருத்துவரிடம் உடனே தெரிவியுங்கள்.

மூச்சுத்திணறல்

மூச்சுக் குழாயானது குறுகியோ, அடைப்புடனோ அல்லது அழற்சியுடனோ இருந்தால், சுவாசிக்கும் போது நுரையீரலில் இருந்து சப்தத்துடனான காற்று வெளியேற்றப்படும். ஒருவருக்கு மூச்சுத்திணறல் பல்வேறு காரணங்களால் ஏற்படும்.

குரலில் மாற்றம்

உங்கள் குடலில் திடீரென்று மாற்றத்தைக் கண்டால் அல்லது உங்கள் குரல் தடித்தோ அல்லது கரகரப்பாகவோ இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

உடல் எடை குறைவு

ஒருவரது உடல் எடை காரணமின்றி அளவுக்கு அதிகமாக குறைந்தால், அது நுரையீரல் புற்றுநோய் அல்லது மற்ற வகை புற்றுநோயினால் கூட இருக்கலாம்.

தலைவலி

தலைவலி நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். சில சமயங்களில் நுரையீரலில் உள்ள கட்டிகளானது, முன்புற பெருநாளத்தில் அழுத்தத்தைக் கொடுக்கிறது.

இந்த பெரிய நாளம் தான் உடலின் மேல் பாகங்களில் இருந்து இதயத்திற்கு இரத்தத்தை ஓடச் செய்கிறது. இந்த நாளத்தில் அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதால், அது தலைவலியைத் தூண்டுகிறது.

ஆசிரியர்