‘ஆர்டர்’ செய்த உணவில் விலை உயர்ந்த முத்துகள்‘ஆர்டர்’ செய்த உணவில் விலை உயர்ந்த முத்துகள்

உணவருந்த சென்ற தொழிலதிபருக்கு, ‘ஆர்டர்’ செய்த உணவில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்துகள் கிடைத்துள்ளன. இத்தாலியை சேர்ந்தவர் கியூசெப் டி பிவாங்கோ.

தொழிலதிபரான இவர் தன் காதலியுடன் சாலரானோ என்ற இடத்தில் உள்ள ஒரு உணவகத்தில், இரவு உணவுக்கு செல்ல திட்டமிட்டு தொலைபேசி மூலம், தங்களுக்கு தேவையான இரவு உணவுகளை ‘ஆர்டர்’ செய்தார். உணவகத்திற்கு வந்த பிவாங்கோவுக்கும், அவர் காதலிக்கும், உணவுகள் பரிமாறப்பட்டன. உணவாக பரிமாறப்பட்ட சிப்பியை சாப்பிட திறந்தபோது, ஒரு சிப்பியில் ஐந்து முத்துகள் கிடைத்தன. இவற்றின் மதிப்பு 1.5 லட்சம் ரூபாய்.

உணவில் இருந்து, விலை உயர்ந்த முத்துகள் கிடைத்ததால், பிவாங்கோவும், அவர் காதலியும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆசிரியர்