ஐந்தரை மாதங்களுக்குப் பின் பூமிக்கு திரும்பிய வீரர்கள்ஐந்தரை மாதங்களுக்குப் பின் பூமிக்கு திரும்பிய வீரர்கள்

விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் (ஐ.எஸ்.எஸ்.) ஐந்தரை மாதங்களாக தங்கியிருந்த அமெரிக்கர் மற்றும் இரு ரஷ்ய விண்வெளி வீரர்கள் நேற்று பத்திரமாக தரையிறங்கினர்.

அமெரிக்காவின் விண்வெளி ஓடங்களுக்கு நிரந்தர ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ரஷ்யாவின் ‘சோயுஸ்’ விண் ஓடம் மூலம் அவர்கள் மூவரும் ரஷ்யாவின் அண்டை நாடான, கசகஸ்தான் நாட்டில் தரையிறங்கினர்.

இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ தலைமையில் சர்வதேச விண்வெளி வீரர்கள் மேற்கொண்டிருந்தனர். இம்மாதம் 25ல், மீண்டும் சோயுஸ் விண் ஓடம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. அதில் ரஷ்ய பெண் உட்பட மூன்று பேர் பயணம் செய்ய உள்ளனர்.

ஆசிரியர்