இரட்டை`சூரிய புயல் பூமியை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதுஇரட்டை`சூரிய புயல் பூமியை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

சூரியனின் வெளி வட்டத்தில் இருந்து வெளிப்படும் பெருமளவிலான காந்த ஆற்றல் `சூரிய புயல்’ என்றழைக்கப்படுகிறது. தற்போது இது இரட்டை சூரிய புயலாக உருவாகியுள்ளது.

முதல் சூரிய புயல் கடந்த 8–ந்தேதி (திங்கட்கிழமை) இரவு ஏற்பட்டது. அது நேற்று இரவு பூமியை வந்தடைந்தது. அதேபோன்று மற்றொரு சூரிய புயல் 10–ந்தேதி மாலை 5.45 மணிஅளவில் உருவானது. அது இன்று பூமியை வந்து தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கத்தை விட 100 முதல் 200 மடங்கு அதி சக்தி வாய்ந்த இந்த சூரிய புயல்களால் பூமியின் மின்காந்த வயல்கள் பாதிக்கப்படும். மேலும் தகவல் தொடர்புகளையும் பாதிக்கும் அபாயமும் உள்ளது. இரட்டை சூரிய புயல் அபூர்வ நிகழ்வாகும். இந்த தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்