அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவால் 50 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நியூயார்க்கில் மட்டும் 4 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவின் பல மாகாணங்களில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி ஃபாரன்ஹீட்க்கும் கீழ் உள்ளது. இதனால் ஹவாய் மாகாணம் உட்பட மொத்தம் 50 மாகாணங்கள் பனியால் உறைந்துள்ளன. பவ்லோ மாகாணத்தை தாக்கிய பனிப் புயலைத் தொடந்து கடந்த ஒரு வாரமாக 50 மாகாணங்களில் கடுமையான பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது.
நியூயார்க் நகரில் பனிப் பொழிவால் வீட்டின் கூரை இடிந்து விழுந்தில் ஒருவர் பலியானார். தொடந்து பனியின் தாக்கத்தால் ஏற்பட்ட உடல் உபாதைகளால் இருவரும், சாலை விபத்தில் ஒருவரும் உயிரிழந்து உள்ளனர்.
பல இடங்களில் 24 மணி நேரத்தில் குறைந்தது 4 அடி முதல் 5 அடி வரையான பனிப் பொழிவு ஏற்படுவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. வீடுகள், வாகனங்கள் பனியால் மூடப்பட்டுள்ளன.
கடந்த 1976-ஆம் ஆண்டுக்கு பின்னர் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் ஒரு வருட காலத்தில் பெய்ய வேண்டிய பனி மூன்றே நாட்களில் பொழிந்துள்ளதால் இந்த நிலவரம் இதுவரை அமெரிக்க வரலாறு காணாதது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டின் பல முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஹவாய் மாகாணத்தை அடுத்து நியூயார்க் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.