June 8, 2023 7:13 am

தாய்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் | வாடகைத் தாய் முறைக்குத் தடைதாய்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் | வாடகைத் தாய் முறைக்குத் தடை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தாய்லாந்தில், வாடகைத் தாய் முறையில் குழந்தைகள் பெற்றுத் தருவதற்குத் தடை விதிக்கும் மசோதா, அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்புவோரின் சொர்க்கபுரியாக தாய்லாந்து அறியப்படுகிறது.

இந்நிலையில் இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், வாடகைத் தாய் முறையை லாபத்துக்காகப் பயன்படுத்துவோர் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்படும்.

தாய்லாந்தில் வாடகைத் தாய்கள் மூலம் பிறந்த குழந்தைகள் குறித்த சர்ச்சைக்குரிய செய்திகள் அடுத்தடுத்து வெளியானதால் எழுந்த எதிர்ப்பு காரணமாகவே, அந்த மசோதா தாய்லாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வல்லோப் துங்கானானுராக் வியாழக்கிழமை கூறியதாவது:

குழந்தை பெற்றுத் தரும் தொழிற்சாலையாக தாய்லாந்தை வெளிநாட்டினர் கருதுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மசோதா, எம்.பி.க்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது என்றார் அவர்.

தாய்லாந்தில் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த ஆஸ்திரேலிய தம்பதி, அந்தக் குழந்தைகளில் மூளைத்திறன் குன்றிய (டெளன் சிண்ட்ரோம்) ஒரு குழந்தையை வாடகைத் தாயிடமே விட்டுச் சென்றதாக கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான செய்தி சர்வதேச அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்