Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆஸ்திரேலிய மால் | 12 லட்சம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதுஆஸ்திரேலிய மால் | 12 லட்சம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது

ஆஸ்திரேலிய மால் | 12 லட்சம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதுஆஸ்திரேலிய மால் | 12 லட்சம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது

1 minutes read

ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பராவில் உள்ள ஒரு ஷாப்பிங்மாலை, வழக்கறிஞர் ஒருவர், 12 லட்சம் வண்ண விளக்குகளால் அலங்கரித்து, உலக சாதனை படைத்து உள்ளார்.வழக்கறிஞர் டேவிட் ரிச்சர்டு என்பவர், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக, ‘கேன்பரா லைட் ஷோ’ என்ற பெயரில், மால் ஒன்றை வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளார்.

இதுகுறித்து கின்னஸ் உலக சாதனை புத்தக வெளியீட்டாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கேன்பராமாலை சுற்றி, 75 மைல் நீளத்திற்கு, எல்.இ.டி., வண்ண விளக்குகள் நட்சத்திரங்களைப் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளன. வண்ண விளக்குகளின் தோரணம், கிறிஸ்துமஸ் மரத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு புறத்திலும் பரிசுகள் தொங்கவிடப்பட்டு, உலகிலேயே மிகப் பெரிய வடிவமாக இடம் பெற்றுள்ளது.இவ்வாறு, அந்தஅறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

 

தன்னுடைய வீட்டை, ஐந்து லட்சம் வண்ண விளக்குகளால் அலங்கரித்து, கடந்த ஆண்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற, டேவிட் ரிச்சர்டு, இந்த ஆண்டும், 11,94,380 மின் விளக்குகளால் கேன்பராமாலை அலங்கரித்து மீண்டும் உலக சாதனை படைத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More